கடவுள் வாழ்த்தை முதன்மையாக வைத்த திருவள்ளுவர் தமிழுக்கு என்று ஏன் ஒரு அதிகாரத்தை வைக்கவில்லை தெரியுமா ? – கவிஞர் தவறை சொன்ன சுவாரசிய தகவல்.

0
697
- Advertisement -

மறுவார்த்தை பேசாதே, கஜினி படத்தின் ஒருமாலை, வசீகரா போன்ற மக்கள் மனதில் என்றும் அழியாத பல பாடங்களை எழுதியவர்தான் பெண் திரைப்பட பாடலாசிரியர் தாமரை.கோவையில் பிறந்த தாமரையின் தந்தை கவிஞர் மற்றும் நாடகாசிரியர் ஆவார். தன்னுடைய தொடக்க காலத்தில் இயந்திர பொறியியல் படிப்பை படித்து வேலைசெய்து வந்த தாமரை கவிதையின் மீதி கொண்ட காதலினால் சென்னைக்கு குடிபெயர்ந்து அங்கு பல கட்டுரைகளையும், கவிதைகளையும், கதைகளையும் எழுதினார்.

-விளம்பரம்-

அதன் பிறகு இவரின் பாடலால் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்ததால் திரையில் பாடல்களை பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. 1998ல் வெளியான தென்றல் எந்தன் நடையை கேட்டது என்ற பாடலின் மூலம் அறிமுகமான இவர் தற்போது பல முன்னை நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில் பாடகர் சித் ஸ்ரீராம் பாடிய மறுவார்த்தை பேசாதே பாடல் ஷோசியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே போல சமீபத்தில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் தாமரை எழுதி இருந்த ‘மல்லிப்பூ’ பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த பாடலை எழுதிய தாமரைக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தாமரை திருக்குறள் குறித்து சொன்ன ஸ்வாரசிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

பொதுவாக கவிஞர் அனைவரும் தமிழ் மொழியில் ஆர்வம் கொண்டிருப்பது அவசியம். இதனாலேயே பெரும்பாலான கவிஞர்கள் தமிழ் இலக்கியங்களை படித்தவர்களாகவே இருப்பார்கள். அந்த வகையில் கவிஞர் தாமரை திருக்குறளை நன்றாகவே படித்து இருப்பவர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தாமரை திருக்குறள் பற்றி பலர் அறிந்திறாத தகவல் ஒன்றை கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் ‘திருக்குறளில் தமிழ் என்ற வார்த்தை கிடையாது தமிழுக்கு என்று ஒரு அதிகாரம் கிடையாது. கடவுள் வாழ்த்தை முதன்மையாக வைத்தவர், மொழிக்காக ஒரு அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும் அல்லவா. திருவள்ளுவர் தமிழை பற்றி ஏன் சிறப்பித்து சொல்லவே இல்லை. அன்றைய காலகட்டத்தில் தமிழ் எல்லோருக்கும் இயல்பாக இருந்தது. எல்லோரும் தமிழில் தான் பேசினார்கள். தமிழுக்கு எந்த அபாயமும் இல்லை. அது எதிர் கொள்ளும் நெருக்கடியும் இல்லை. தமிழ் வளர்ந்து செழித்தது ஒவ்வொருவரிடமும் இயல்பாகவே இருந்தது. அதனால் தமிழுக்கு என்று ஒரு தனி அதிகாரம் வைத்து தமிழ் மீது பற்றோடு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் திருவள்ளுவருக்கு ஏற்படவில்லை. அதனால் அதற்கான ஒரு தேவையும் இருக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement