அவர் நடித்த போது ரெண்டு சம்பவம் நடந்தது – சீரியலில் இருந்து பிர்லா போஸ் நீக்கப்பட்டது காரணம் குறித்து கயல் இயக்குனர்.

0
593
Kayal
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் பிர்லா போஸ் குறித்த சர்ச்சை தான் வைரலாகி வருகிறது. சன் டிவியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் கயல். அதோடு சன் டிவி சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் தான் முன்னிலையில் இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியல் இருந்து பிரபல நடிகர் பிர்லா போஸை மாற்றம் செய்திருக்கிறார்கள்.சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகர் பிர்லா போஸ். இவர் பல வருடங்களாக சீரியலில் நடித்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் படங்களில் நடித்தும் இருக்கிறார். இவர் கயல் தொடரில் வஜ்ரவேல் என்ற போலீஸ் கதாபத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் கயல் சீரியலில் இருந்து விலகியது குறித்து பேட்டியில், 20 வருடத்திற்கு மேலாக நான் டிவியில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

-விளம்பரம்-

வஜ்ரவேல் கதாபாத்திரத்திற்கு பிறகு சீரியல் ரேட்டிங்க் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று என்னுடைய கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை கமிட் செய்திருக்கிறார்கள். பொதுவாகவே ஷூட்டிங்கில் எந்த ஒரு பிரச்சனையும் செய்யாத ஆள் நான். சீரியல் யூனிட்டில் முறைப்படி சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டு தான் போனேன். அங்க போன இடத்தில் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. அதை சரி செய்ய அடுத்த நாள் சீரியலுக்கு தனியாக நேரம் ஒதுக்கி ஃப்ரீயாகவே நடித்துக் கொடுத்தேன். அதை ஏற்றுக் கொண்டதா என்னிடம் சொன்னார்கள். ஆனால், பின்னாடி அதையே பிரச்சினையாகி சின்னத்திரை நடிகர் சங்கத்தில் என் மீது புகார் தந்திருந்தார்கள். பின் என்னுடைய கதாபாத்திரத்தில் இன்னொரு ஆர்ட்டிஸ்ட் கமிட் செய்து விட்டார்கள்.

- Advertisement -

பிர்லா போஸ் அளித்த பேட்டி:

தயாரிப்பு தரப்பிடமோ, சேனல் மீதும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இயக்குனர் தான் கேம் ஆடி இருக்கிறார். அவர் சாப்பிட்டால் தான் மற்றவர்கள் சாப்பிடணும் என்று சொல்வார். இதனால் நான் தட்டி கேட்டேன். அப்போது இருந்தே அவருக்கு என் மீது கோபம். எந்த கோபமானாலும் என்னிடம் கூப்பிட்டு பேசி இருக்கலாம். அதை விட்டுட்டு எனக்கே தெரியாமல் என்னுடைய கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை போட்டது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக கயல் சீரியலின் இயக்குனர் செல்வம் கூறி இருப்பது, பிர்லா போஸும் எனக்கும் ஏற்கனவே நல்ல பழக்கம் இருக்கிறது. நான் இயக்கிய அழகு, கல்யாண பரிசு போன்ற சில சீரியலில் அவர் நடித்திருந்தார். கயல் தொடரில் வஜ்ரவேல் என்ற போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்க நான் தான் அவரிடம் பேசினேன்.

இயக்குனர் அளித்த பேட்டி:

சீரியல் சூட்டிங் பொறுத்தவரை ஷூட்டிங் ஷெட்யூல் ரொம்ப முக்கியம். அவர் நடித்த போது ரெண்டு சம்பவம் நடந்தது. முதலில் ஒருநாள் சீரியல் சூட் நடந்து கொண்டிருக்கும்போதே சாயங்காலம் ரெண்டு மணி நேரம் அவருக்கு வேறொரு சூட்டிங் போக வேண்டி இருந்தது. அதை என்னிடம் அப்படியே சொல்லி இருந்தால் நானே அதற்கு ஏற்றபடி ஷூட்டிங் மாற்றி அவரை போக வைத்திருப்பேன். ஆனால், உண்மையான அந்த காரணத்தை சொல்லாமல் பேமிலியோட வெளியில் போறோம் என்று அவர் சொன்னதாக எனக்கு தகவல் வந்தது. இரண்டு மணி நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு போனார். திரும்பி வரவே இல்லை. ஃபோனை எடுக்கவில்லை. மறுநாள் காலையில் வந்து அதற்கு பதில் இன்னைக்கு ஃப்ரீயா நடித்துக் கொடுக்கிறேன் என்று சொன்னார். முதல் நாள் எடுக்க வேண்டிய சீன்கள் மறுநாள் எடுக்க முடியுமா? ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் இது தெரியாதா? இவரால் தயாரிப்பு நிறுவனத்திற்கு அன்னைக்கு நஷ்டம்.

-விளம்பரம்-

பிர்லா போஸ் குறித்து சொன்னது;

போனை எடுத்துப் பேசலாமே என்று கேட்டதற்கு வழியில் ஒரு சின்ன விபத்து. என் போனை போலீஸ் புடுங்கி வைத்து விட்டார்கள் என்று சொன்னார். இதெல்லாம் நம்பற மாதிரியா சார் இருக்கு? இன்னொரு நாள் சீரியலுக்கும் தேதி கொடுத்துவிட்டு அதே நாள் ரஜினி சார் நடிக்கிற தலைவர் 170 படத்துக்கும் கொடுத்திருக்கிறார். சென்னையில் காலையில் ஷூட்டிங். அவர் ரஜினி சார் படத்தின் சூட்டிங்கில் திருநெல்வேலியில் இருக்கிறார். எங்களுக்கு தகவலே இல்லை.

நாங்கள் இங்கு அவரை தேடிக் கொண்டிருந்தோம். திருநெல்வேலியில் இருந்து ரஜினி சார் படத்தின் மேனேஜர் எனக்கு போன் பண்ணி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று சொன்னார். ஒரு சீனியர் ஆர்டிஸ்ட் கிட்ட இந்த மாதிரி நான் எதிர்பார்க்கவே இல்லை. ஷூட்டிங்கில் இப்படி குழப்பம் வந்ததால் தான் தொடர்ந்து அவரை வைத்து ஷூட்டிங் பண்ணுவது சிக்கல் வந்தது. அப்போது கூட வஜ்ரவேல் கதாபாத்திரத்தை நாங்கள் சீரியலில் இருந்து தூக்கவோ அல்லது பிர்லா பதிலாக இன்னொரு நடிகரை அந்த கேரக்டரில் கமிட் செய்யவோ இல்லை.

சீரியலில் வஜ்ரவேல் ரோல்:

அதே போல் சூட்டிங் ஸ்பாட்டில் நான் சாப்பிட்ட பிறகுதான் மற்றவர்களை சாப்பிட அனுமதிக்கிறேன் என்று அவர் சொல்லியிருந்தார். இந்த குற்றச்சாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதே நேரம் எனக்கு சிரிப்புதான் வருகிறது. சூட்டிங் நடக்கும்போது நீங்க ஸ்பாட்டுக்கு வந்து யாரிடம் ஆவது கேட்டீங்கன்னா இதுக்கான பதிலை நீங்களே தெரிந்து கொள்ளலாம். என் கேரக்டரை தூக்கி விட்டார்கள் என்று பிர்லா போஸ் சொன்னார். அந்த கதாபாத்திரத்தை தூக்கவே இல்லை. பிர்லா போஸ் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவர் ஒரு வழக்கை சரியாக டீல் செய்யவில்லை என்று சஸ்பெண்ட் செய்து இருப்பார்கள். இதனால் அவர் விசாரித்த வழக்கை வேறு ஒரு அதிகாரி விசாரிக்க தொடங்கி இருக்கிறார். அவ்வளவுதான் மற்றபடி அவர் கதாபாத்திரத்தை தூக்கவோ, வேறொரு நடிகரை வைத்து எடுக்கவோ இல்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement