நாகர்ஜுனா கிட்ட இருந்து கத்துக்கோங்க – தெலுங்கு பிக் பாஸ் வீடியோவை பகிர்ந்து கமலுக்கு அறிவுரை கூறும் ரசிகர்கள்.

0
494
- Advertisement -

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்து வருகிறது. ஆனால் அந்த சர்ச்சைகளை எல்லாம் கமல் பெரிதாக கண்டு கொள்வதில்லை என்பது குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிக்சன், வினுஷாவின் உடல் அமைப்பை கேலி செய்யும் விதமாக பேசி இருந்தது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இந்த விஷயம் குறித்து கமல் வார இறுதியில் கேட்பார் என்று வினுஷா கூட எதிர்பார்த்து இருந்தார். ஆனால் இது குறித்து கமல் எந்த ஒரு கேள்வியும் எழுப்பவில்லை.

-விளம்பரம்-

இதனால் வினுஷா மட்டுமல்லாது பிக் பாஸ் பார்க்கும் ரசிகர்களையும் பெருத்த ஏமாற்றத்தில் தள்ளியது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் தகுதியானவர் இல்லை என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்சனை போலவே பெண்களின் உடல் அமைப்பு குறித்து சைகை செய்து பேசிய போட்டியாளரை நாகர்ஜுனா வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற நாமினேஷனின் போது போட்டியா ஒருவர் பெண் போட்டியாளரை பார்த்து அவரது உருவத்தை கேலி செய்யும் விதமாக சைகை காண்பித்து பேசியிருந்தார். இதுகுறித்து வார இறுதியில் கேட்ட நாகர்ஜுனா அந்த போட்டியாளரை வெளுத்து வாங்கியதோடு அவருக்கான குறும்படத்தையும் போட்டுக் காண்பித்து சம்பந்தப்பட்ட அந்த பெண் போட்டியாளர் ஏன் அப்போதே இதை கேட்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த வீடியோவை தமிழ் பிக் பாஸ் ரசிகர்கள் பகிர்ந்து பேசாமல் நாகர்ஜுனாவே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என்று கூறி வருகிறார்கள் தமிழில் ஒளிபரப்பாகி வருவதைப் போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி தெலுங்கில் கன்னடம் மலையாளம் இந்தி என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

ஆனால் மற்ற மொழிகளில் எல்லாம் தொகுத்து வழங்கி வரும் ஹீரோக்கள் போட்டியாளர்கள் ஏதாவது தவறு செய்தால் அவர்களை வெறுத்து வாங்கி விடுகிறார் ஆனால் கமல் மட்டும்தான் தன்னுடைய இமேஜ் போய்விடும் என்று போட்டியாளர்கள் தவறே செய்தாலும் அவர்களை பெரிதாக கண்டிப்பது கிடையாது மேலும் போட்டியாளர்களுக்கு கூறும் அறிவுரைகளை கூட டிப்ஸ் என்று தான் கூறி வருகிறார்.

இதனாலேயே கமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தகுதி இல்லை என்று கடந்த சில சீசன்களாகவே ஊறி வருகிறார்கள். மேலும் கடந்த சீசனில் போது தமிழுக்கு உடல் நலவு குறைவு ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கி இருந்தார் ஆனால் அவர் கமலை போல பூசி மழுப்பாமல் தவறு செய்யும் போட்டியாளர்களை நேரடியாகவே சுட்டிக்காட்டி அவர்களை வெளுத்து வாங்கி இருந்தார்.

இதனால் அடுத்த சீசனை சிம்பு தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று பெரும்பாலான ரசிகர்கள் கூறி வந்தார்கள் இப்படி இருக்க தமிழ் இந்த சீசனிலும் கமலே தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், இந்த சீசனிலும் கூட தவறு செய்யும் போட்டியாளர்களை கமல் பெரிதாக கண்டிப்பதாக தெரியவில்லை. இப்படி ஒரு நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வீடியோ ரசிகர்கள் பகிர்ந்து கமல், நாகர்ஜுனாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Advertisement