பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சரவணன் விக்ரம் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 84 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் விக்ரம், விசித்ரா, ரவீனா ஆகிய மூன்று பேர் மட்டும் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் விக்ரம் அல்லது ரவீனா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதில் ரவீனா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால், சரவண விக்ரம் கடந்த வாரம் வெளியேறிவிட்டார். இவர் நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து தற்போது வரை பெரிதாக எந்த ஒரு விஷயத்திலுமே ஈடுபாடுடன் செய்யவில்லை.மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டாலும் அதை கண்டு கொள்ளவும் இல்லை, தலையிடுவதும் இல்லை. அதோடு அடிக்கடி இவர், தன்னைத்தானே டைட்டில் வின்னர் என்றும் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் ரசிகர்களுக்கு மத்தியில் கடுப்பை ஏற்றி இருந்தது.
அதே போல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இவர் சேர்ந்து அவர்களுக்கு ஜால்ரா அடித்ததும் ரசிகர்களுக்கு இவர் மீது கொஞ்சம் வெறுப்பை உண்டாக்கியது. கடந்த வாரம் Family Roundன் போது விக்ரமை பார்க்க அவரது தங்கை வந்து இருந்தார். அப்போது விக்ரமிடம் , பூர்ணிமாவை கூட ஏற்றுக்கொள்வேன். ஆனால், மாயாவை நான் ஏற்க மாட்டேன். உன்னிடம் நன்றாக பேசிவிட்டு உன் முதுகுக்கு பின்னாடி உன்னையே திட்டுகிறார்கள்.
யாரையும் நம்பாதே, யாருக்காகவும் விளையாடாதே என்றெல்லாம் அறிவுரை கூறி இருந்தார். அதே போல விக்ரம் குடும்பத்தினரும் மாயா மீது இருந்த வெறுப்பை அவர் மீது நேரடியாகவே காட்டி இருந்தனர். இதனால் விக்ரம் மீது செம காண்டில் இருந்தார் மாயா. இப்படி ஒரு நிலையில் நேற்று விக்ரம் வெளியேருவதாக அறிவித்த போது மாயா செய்த செயல்கள் தான் நெட்டிசன்களை பெரும் எரிச்சலடைய செய்துள்ளது.
விக்ரம் வெளியேறுகிறார் என்ற அறிவிப்பை சொன்னதும் மாயா தனது முகத்தை மிகவும் வன்மத்துடன் வைத்து இருந்தார். மேலும், அவர் வெளியில் செல்லும் வரை அவரிடம் மாயா எதுவும் பேசவே இல்லை. பின்னர் விக்ரம் மாயாவிடம் சாரி கேட்டு அவரை Hug செய்ய முயன்ற போதும் மாயா அவரை உதாசீனம் செய்வது போலவே நடந்துகொண்டார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் மாயா போன்று ஒரு கேவலமான நபர் பிக் பாஸ் வரலாற்றிலேயே இல்லை என்று விமர்சித்து வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் மாயாவின் இந்த செயலை ரவீந்தர் விமர்சித்து இருக்கிறார். அதில் பெருசா maturity இல்லாத அந்த பையனுக்கு இருக்க தன்மை கூட மாயாவிற்கு இல்லை. மாயா மட்டும் ஜெயித்தால் பிக் பாஸ் ஒரு கெட்ட உத்தரமானாகிவிடும். இருபத்துலயே கேவலமான போட்டியாளர்கள். நீ என்னதான் Entertaintment பண்ணாலும் நீ பிக் பாஸுக்கு தகுதியே இல்லாத ஆளு என்றும் கூறி இருக்கிறார்.