உதயநிதி கூடல்லாம் ஏன் நடிக்கிறன்னு கேட்டாரு – கீர்த்தி சுரேஷ் சொன்ன ஷாக்கிங் தகவல்.

0
1706
KeerthySuresh
- Advertisement -

உதயநிதி கூட ஏன் நடிக்கிறாய்? என்னை திருமணம் செய்து கொள் என்று வீடு தேடி வந்த நபர் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் மயக்கம் என்ன என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது.

- Advertisement -

கீர்த்தி சுரேஷ் திரைப்பயணம்:

மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளிவந்த சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. பின் சமீபத்தில் இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த “தசரா” என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நானி நடித்து இருந்தார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி:

இப்படத்தில் வைகைபுயல் வடிவேலு, பஹத் பாசில் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் அவர் தன்னுடைய திருமணம் குறித்து கூறியது, என்னைப் பற்றிய வதந்திகள் சோசியல் மீடியாவில் வந்து கொண்டே இருக்கிறது. என்னை ஒவ்வொரு முறையும் கல்யாணம் செய்து கொடுத்து கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் நான் என்னுடைய நண்பரை வாழ்த்தி instagram ஸ்டோரில் பதிவு ஒன்று போட்டிருந்தேன். அதற்குள் அவரைத்தான் நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று செய்திகளை பரப்பி விட்டார்கள்.

திருமணம் குறித்து கீர்த்தி சொன்னது:

பாவம் அவர்! அவருடைய காதலி ரொம்ப வேதனை அடைந்து விட்டார். பிரண்டுக்கு கூட ஒரு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க முடியாமல் போவது நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த கல்யாணம் விஷயம் ஜாலியாகத்தான் இருந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல அது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எனக்கு சோசியல் மீடியாவில் இருந்து தான் பிரச்சனை வருகிறது. ஒருவர் என்னை காதலிக்கிறேன், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சோசியல் மீடியாவில் வற்புறுத்திக் கொண்டே இருந்தார். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அவர் என்னுடைய வீடு தேடி வந்துவிட்டார். அப்போது நான் வீட்டில் இல்லை வேலையாட்கள் தான் இருந்தார்கள். அவர் பார்ப்பதற்கு வேறு மாதிரி இருந்தார். பின் அவர், உதயநிதி கூட ஏன் நடிக்கிறாய் என்றெல்லாம் கேட்டிருந்தார். அதன் பின் அவர் மீது நான் புகார் அளித்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement