வரலக்ஷ்மி சரத்குமார் குறித்து ட்வீட் போட்டு மீண்டும் Troll பீசான கீர்த்தி சுரேஷ். (மண்ட மேல இருக்க கொண்டய மறந்த மொமெண்ட்)

0
26554
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் கீர்த்திசுரேஷ் தெலுங்கில் நடித்த மகாநதி திரைப்படம் கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது அதைத்தொடர்ந்து அம்மணியின் புகழ் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடிப்பதாக இருந்த படம் கைநழுவி போனது இருப்பினும் பாலிவுட்டில் இன்னொரு படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சொன்ன ;பிறந்தநாள் வாழ்த்து பெரும் கேலிக்கு உள்ளாகியுள்ளது.

இதையும் பாருங்க : நிலா சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் நடிகை – உள்ளாடையில் கொடுத்த போஸ்.

- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலக்ஷ்மி இருவரும் இணைந்து விஜய்யின் சர்க்கார் மற்றும் விஷாலின் சண்டக்கோழி 2 போன்ற படங்களில் நடித்துள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் நல்ல தோழிகள் கூட இப்படி ஒரு நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை வரலக்ஷ்மிக்கு நேற்று (மார்ச் 3) தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் ட்வீட் செய்த வரலக்ஷ்மி, நன்றி செல்லம். ஆனால், என்னுடைய பிறந்தநாள் 5 ஆம் தேதி தான் என்று பதிவிட்டுள்ளார். பிறந்தநாளுக்கு இரண்டு நாளைக்கு முன்பாகவே கீர்த்தி சுரேஷ் இப்படி பிறந்தநாள் வாழ்த்தை சொன்னதை நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா. உடனே கீர்த்தி சுரேஷை கண்ட மேனிக்கு கலாய்த்து வருகின்றனர். வடிவேலு சொல்வது போல மண்ட மேல இருக்க கொண்டய மறந்துட்டீங்களே கீர்த்தி.

-விளம்பரம்-
Advertisement