நயன்தாரா இடத்தை பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!எந்த விஷயத்தில் தெரியுமா..!

0
662
Kerthy-suresh-nayanthara

2018 -ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்தவர்கள் என்ற பெருமையை 3 கதாநாயகிகள் பெற்றுள்ளனர். அதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி, நயன்தாரா ஆகியோரின் பெயர்களும் அடக்கம்.

Keerthy suresh

கீர்த்தி சுரேஷ் ‘தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சர்கார், சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2’ ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் சீமராஜா படத்தில் கவுரவ வேடத்திலும் நடித்தார். இந்த ஆண்டு அதிக படங்களில் கதாநாயகியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் அதிக வெற்றி படங்களை கொடுத்ததும் கீர்த்தி சுரேஷ் தான்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக இந்த பெருமைகளை கைவசம் வைத்து இருந்த நயன்தாரா இந்த ஆண்டு 2 படங்களில் தான் நடித்துள்ளார். இரண்டுமே அவர் முதன்மை வேடத்தில் நடித்தவை.

இது தொடர்ந்தால் தன்னுடைய முதல் இடத்துக்கு ஆபத்து என்பதை உணர்ந்த நயன்தாரா சமீபகாலமாக பெரிய கதாநாயகர் படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார். நயன்தாரா இடத்தை இந்த ஆண்டும் கீர்த்தி சுரேஷ் பிடிப்பாரா என்பதை அவர் தேர்வு செய்யும் படங்களே முடிவு செய்யும்.