நீங்க என்ன குருடா.! நடுவரிடம் வாக்கு வாதம் செய்த கோலி.! வைரலாகும் வீடியோ.!

0
634
Kholi
- Advertisement -

ஐ பி எல் போட்டி என்றாலே அதில் சர்ச்சைக்கு என்றும் பஞ்சமே இருந்தது இல்லை. அதிலும் விராட் கோலி போன்ற ஆக்ரோஷமான வீரர்கள் ஆடினால் சொல்ல வேண்டியதே இல்லை. அந்த வகையில் சமீபத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

-விளம்பரம்-
மும்பை இந்தியன்ஸ்

இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களே எடுக்க முடிந்தது. இதன்மூலம் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியிலும் நோ பால் சர்ச்சை எழுந்ததுள்ளது. ஆட்டத்தின் இறுதி ஓவரை மலிங்கா வீசினார். கடைசிப் பந்தில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆஃப் ஸ்டெம்பை நோக்கி தாழ்வாக வீசப்பட்ட அந்தப் பந்தில் சிவம் டூபே லாங் ஆன் திசையில் பந்தைத் தட்டிவிட்டார். எல்லைக்கோடு அருகே சென்ற பந்தை ரோஹித் சர்மா பிடித்தார். பெங்களூரு வீரர்கள் ரன் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. மும்பை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டிக்குப் பின்னர் பேசிய கோலி, “நாம் ஐ.பி.எல் லெவல் கிரிக்கெட் விளையாடுகிறோம். க்ளப் கிரிக்கெட் அல்ல. களநடுவர்கள் தங்களது கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும். இது கொடுமையானது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அவர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement