மீண்டும் ஒரு கேங்ஸ்டர் கதை – துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ எப்படி ? முழு விமர்சனம் இதோ.

0
2335
- Advertisement -

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கிங் ஆஃப் கொத்தா. இந்த படத்தில் நடிகர் துல்க்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷபீர், பிரசன்னா, கோகுல் சுரேஷ், நைலா உஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். நிமிஷ் ரவி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஆங்கிலேயர்களின் காலகட்டத்தில் குற்றவாளிகளை கொடூரமாக சுட்டுத்தள்ளி தண்டனை வழங்கும் இடத்தை தான் கொத்தா என்று சொல்வார்கள். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மக்கள் அந்த இடத்தில் குடி பெயர்கிறார்கள். குற்றவாளிகளை தண்டிக்கும் இடமாக இருந்த கொத்தா குற்றவாளிகள் உடைய சாம்ராஜ்யமாகவே மாறிவிட்டது. அந்த இடத்தில் போதை பொருள் வியாபாரம் செய்கிறார்கள்.

- Advertisement -

இந்த இடம் கண்ணன் பாய் என்ற ரவுடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும், இந்த இடத்திற்கு புதிய காவல்துறை அதிகாரியாக பிரசன்னா வருகிறார். இவர் கண்ணன் பாய் செய்யும் அராஜகத்தை எல்லாம் தெரிந்து கொள்கிறார். கண்ணன் பாய் பயப்படும் ஒரே ஆளாக துல்கர் சல்மானை பற்றியும் தெரிந்து கொள்கிறார் . பின் துல்கர் சல்மான் உடைய பிளாஷ்பேக் காண்பிக்கிறார்கள். பல வருட காலமாக ரவுடிசம் செய்யும் துல்கர் சல்மான் தன்னுடைய காதலிக்காக போதைப்பொருள் செய்யும் வேலை எல்லாம் நிறுத்திவிட்டு இருக்கிறார்.

ஆனால், அவருடைய காதலியும் நண்பரும் ஏமாற்றி விடுகிறார்கள். இதனால் மனமுடைந்த துல்கர் சல்மான் ஊரைவிட்டு வெளியேறுகிறார். இதை அறிந்த பிரசன்னா கண்ணன் பாயை அழிக்க திட்டமிடுகிறார். இறுதியில் பிரசன்னா திட்டம் நிறைவேறியதா? துல்கர் சல்மான் மீண்டும் கொத்தாவிற்கு அரசர் ஆனாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. வழக்கமான ஒரு ரொமான்டிக், ரவுடிசம் கதை இல்லாமல் இந்த படத்தில் துல்கர் கதாபாத்திரம் ரசிக்க வைத்திருக்கிறது.

-விளம்பரம்-

படம் முழுக்க துல்கர் சல்மான் தாங்கி செல்கிறார் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் கதை விறுவிறுப்பாக நடைபெறும். இடையில் மெதுவாக செல்வது போல் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் எமோஷன், பிஜிஎம் என்று பில்டப் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது. அதோடு படத்தின் சண்டைக் காட்சிகள் எல்லாம் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது. பாட்ஷா, தளபதி, அஞ்சான் படங்களைப் போலவே இரு நண்பர்களுக்கு மத்தியில் ஏற்படும் சண்டை, காதல் கதையை தான் இந்த படத்திலும் இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

இதனால் படம் சீக்கிரம் முடியாதா என்று ரசிகர்கள் கொந்தளித்து இருந்தார்கள். படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்தாலும் இயக்குனர் அதை கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனத்தை செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். வழக்கமான கேங்ஸ்டர் கதைதான் மற்றபடி இதில் எந்த ஒரு சுவாரசியத்தையும் காண்பிக்கவில்லை. அதே போல் பிரசன்னாவினுடைய நடிப்பு சிறப்பாக இருந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் கம்பீரமாகவும் மாசாகவும் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் சுமாராகத்தான் இருக்கிறது. இரண்டாம் பாதி பார்வையாளர்களை ரொம்பவே சோதித்து இருக்கிறது. படத்தில் பெண்கள் குறித்து வரும் கொச்சையான வார்த்தைகளை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் துல்கர் சன்மானின் கிங்ஸ் ஆப் கொத்தா படம் ரொம்ப ரொம்ப சுமாரான படமாக தான் இருக்கிறது.

நிறை:

துல்கர் சல்மான் நடிப்பு ஓகே

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

முதல் பாதி நன்றாக இருக்கிறது

வில்லன் நடிப்பு அற்புதம்

குறை:

இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

பிரசன்னாவின் கதாபாத்திரத்திற்கு அழுத்தம் கொடுத்து இருக்கலாம்

பின்னணி இசை சுமார்

வழக்கமான கேங்ஸ்டர் கதை

அரைத்த மாவை தான் இந்த படத்திலும் இயக்குனர் அறைத்திருக்கிறார்

மொத்தத்தில் கிங்ஸ் ஆப் கொத்தா-தோல்வி

Advertisement