லைகர் பட விமர்சனம் – வச்சி செய்த ப்ளூ சட்டை. ஆமா, சிங்கம் புலி படத்தை ஏன் போட்டுள்ளார். குசும்புயா இவருக்கு.

0
617
bluesattai
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார்.இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து விடுகிறது. கடைசியாக இவர் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் ஹீரோவாக மட்டும் நடித்து வராமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் நடிப்பில் லைகர் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்கி இருக்கிறார். இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் Pan இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குவியும் நெகட்டிவ் விமர்சனங்கள் :

இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இன்று ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. முதல் நாளே இந்த படத்திற்கு பல விதமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.

வச்சி செய்த பிரசாந்த் :

மேலும், பல விமர்சகர்களும் இந்த படத்தை வச்சி செய்து வருகின்றனர். பிரபல தமிழ் விமர்சகரான பிரசாந்த் கூட இந்த படத்தை விமர்சனம் செய்து இருந்தார். அதிலும் இந்த படத்தில் நடித்த அனன்யா பாண்டேவிற்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை என்றும் அவருடன் வரும் தோழிகளின் நடிப்பை சேர்த்து பாக்கியலட்சுமி தொடரில் வரும் பாக்கியாவே Expression கொடுத்துவிடுவார் என்று கூறி கலாய்த்து இருந்தார்.

-விளம்பரம்-

ப்ளூ சட்டை விமர்சனம் :

சரி, பிரசாந்த்தே இந்த படத்தை இந்த கிழி கிழித்தார் என்றால் நம்ம ப்ளூ சட்டை சும்மாவா இருப்பார். அவரும் இந்த படத்தை நார் நாராக கிழித்து இருக்கிறார். அதிலும் இந்த படத்தின் விமர்சனத்தில் விஜய் தேவர்கொண்டா படத்திற்கு பதிலாக சிங்கம் புலி படத்தை போட்டு இருக்கிறார். அதாவது லைகர் என்பது சிங்கம் மற்றும் புலியின் கலவையில் பிறந்த ஒரு Breed தான். அதை குறிப்பிட்டே சிங்கம் புலி படத்தை போட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை.

விஜய் தேவர்கொண்டாவின் Over Confidence :

இது ஒருபுறம் இருக்க லைகர் பட தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது விஜய் தேவர்கொண்டாவின் ஓவர் காண்பிடண்ஸ் தான். கடந்த வருடம் விஜய் தேவரகொண்டா டிவிட்டரில் லைகர் திரைப்படத்தை ரூ. 200 கோடி கொடுத்து பிரபல OTT நிறுவனம் வாங்க உள்ளது என்ற தகவலின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.அந்த புகைப்படத்தை பதிவிட்டு விஜய் தேவரகொண்டா “மிகவும் குறைவு, நான் இதை விட அதிகமாக வசூல் செய்வேன்” என பதிவிட்டு இருந்தார்.

Advertisement