லேடி சூப்பர் ஸ்டார் “கோலமாவு கோகிலா” முதல் நாள் வசூல் என்ன தெரியுமா..?

0
517
Kolamaavu-kokila

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் கதாநாயகியை மையப்படுத்திய கதைக்களம் கொண்ட படமாக வெளியான ‘மாயா, அறம்’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல சாதனைகளை படைத்தது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள “கோலமாவு கோகிலா” படமும் கதாநாயகி சப்ஜெட் என்பதால் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பது இருந்து வந்தது. மேலும், அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல ‘கோலமாவு கோகிலா’வும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமரசங்களை பெற்று வருகிறது.

நேற்று (ஆகஸ்ட் 17) வெளியான இந்த படம் சென்னையில் நேற்று ஒரு நாள் மட்டும் 43 லட்சம் வசூல் செய்துள்ளது. நயன்தாராவின் முந்தய படங்களை விட இந்த வசூல் கொஞ்சம் குறைவு தான். இருப்பினும் நடிகை நயன்தாராவின் மீதுள்ள எதிர்பார்பால் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அதுபோக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் இன்னும் இரண்டு நாட்களில் இந்த படத்தின் வசூல் இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த வாரம் வெளியான’ பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘விஸ்வரூபம் 2’ ஆகிய படங்களின் போட்டியிலும் ‘கோலமாவு கோகிலா’ நல்ல நிலையிலான வசூலை பெற்றுள்ளது.

Advertisement