சர்கார் ஷூட்டிங்கில் விஜய்க்கு நடந்த மோசமான சம்பவம்.! வருத்தத்தில் ரசிகர்கள்

0
362
Sarkar

இளையதளபதி விஜய், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார் ‘ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்க்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

vijay actor

விஜய் ஏற்பட்டுள்ள இந்த காயம் சண்டைகாட்சிகளின் போது ஏற்படவில்லை என்றும், சமீபத்தில் லாஸ் வேகாஸில் நடைபெற்ற பாடல் பாடப்பிடிப்பின் போது நடனமாடுகையில் கால் சற்று தவறி லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் சிறுது காலம் சிகிச்சை பெற்றுவிட்டு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்புகளை பக்கவாக முடித்துக்கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். விஜய்க்கும் ஏற்பட்டுள்ள காயம் சிறு காயம் தான் என்பதால் சிறுது நாட்கள் ஒய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும், லாஸ் வெகாஸில் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு சென்னை திரும்பி படத்தின் டப்பிங் வேலைகளில் ஈடுபட இருக்கிறார். அதே போல தீபாவளிக்கு ‘சர்கார்’ படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் இன்னும் இரண்டு மாதத்தில் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.