நம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..!

0
328
Karan

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “நம்மவர் “படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட்டானது. கௌதமி, நாகேஷ், நடன இயக்குனர் பிருந்தா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடத்த இந்த படத்தில் நடிகர் கரனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த படத்தில் நடிகர் கமல் ஒரு கல்லூரி ஆசிரியராகவும், நடிகர் கரண் அவருக்கு அடங்காத ஒரு மாணவனாகவும் நடித்திருப்பார். இவர்கள் இருவருக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ஆனால், நடிகர் கரண் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்து, பிரபல நடிகர் அபிஷேக் தானம்.

நடிகர் அபிஷேக், துப்பறிவாளன் , ஆம்பள, ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ,சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பரிட்சியமானார். ஆனால், அதற்கு முன்னாள் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தான் ‘காதல் கோட்டை’ படத்தில் முதன் முதலில் நடித்து வந்தாராம் .

நடிகர் அபிஷேக்;

Abishek

ஆனால்,சில பல பிரச்சனைகளால் அபிஷேக், படத்தில் இருந்து பாதியிலேயே விலகி விட்டடார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. காதால் கோட்டை படத்திற்கு முன்பாகவே கமல் நடித்த’ நம்மவர்’ படத்திலும் கரண் கதாபாத்திரத்தில் இவர் நடிக்க இருப்பதாக இருந்தது, ஆனால், அவர் அந்த சமயத்தில் வேறு ஒரு படத்தில் கமிட் ஆனதால் “நம்மவர் ” படத்தின் வாய்ப்பு கை நழுவி போனதாம்.