ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு.! கொதித்தெழுந்த குரல் கொடுத்த நடிகர்கள்..! என்ன சொன்னார்கள் தெரியுமா

0
1108
Sterlite
- Advertisement -

தமிழகத்தில் நேற்று தூத்துக்குடியில் நடந்த கொடூரமான சம்பவத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் 11 உயிர்கள் பலியாகின. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல விஷயங்களுக்கு வாய் திறக்காத நடிகர்கள் கூட இந்த கொடுரமான தாக்குதகுக்கு ட்விட்டரில் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

- Advertisement -

விஜய் சேதுபதி:- சட்டமோ அரசாங்கமோ எவையும் மக்களின் நலன்/ பாதுகாப்புக்காக வேண்டியே. அவையே மக்களின் உயிர் கொல்லியாக மாறினால எதற்கு ஒரு அரசாங்கம் ? நியாபகம் இருக்கட்டும் கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே.என்று பதிவிட்டுள்ளார்.

ஜெயம் ரவி:- ஒருவரது உயிரை எடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட கொலைக்கு நான் எனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். உயுரிழந்தோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

-விளம்பரம்-

ஹரிஷ் கல்யாண் :- தூத்துக்குடியில் நடந்த இந்த மனித நேயமற்ற செயலுக்கு அரசாங்கமும் காவல் துறையினரும் கண்டிப்பாக ஒரு நாள் பதில் சொல்ல வேண்டும். நமது நாடு எங்கே போகிறது என்று பதிவிட்டுள்ளார்.

தனுஷ்:- ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.இப்படி ஒரு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.தண்டிக்கப்பட வேண்டும் உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.என்று பதிவிட்டுள்ளார்.

பல்வேறு பொது மக்களும், அரசியல் பிரபலங்களும் இந்த சம்பவத்ங்கிற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். தங்களது உரிமைக்காக போராடினால் அநியாயமாக கொல்லப்படுவார்கள் என்று இதுவரை யாரும் கேள்விப்பட்டதில்லை. இதுகிறித்து தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்று அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

Advertisement