‘உங்க பொண்ணு வயசுக்கு 13 லட்சம் கார் தேவை தானா?’ விமர்சித்தவர்களுக்கு கொட்டாச்சி அளித்த பதிலடி.

0
393
- Advertisement -

தனது மகள் பிறந்தநாளுக்கு கார் பரிசளித்தது குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார் கொட்டாச்சி. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கொட்டாச்சி. வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் படத்தில் இணைந்து கலக்கிய கொட்டாச்சியை சமீப காலமாகவே படத்தில் காண முடியவில்லை. இவர் சினிமா உலகில் தன்னை சிறந்த காமெடியனாக நிலைநிறுத்திக் கொள்ள பல போராட்டங்களை செய்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இவருடைய மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆகி விட்டார்.கடந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வந்து சூப்பர் ஹிட் கொடுத்த இமைக்காநொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக மானஸ்வி நடித்து இருந்தார். இந்த படத்தில் மானஸ்வி நடிப்பு பாராட்டக்கூடிய வகையில் இருந்தது.

- Advertisement -

இதனாலே இந்த படத்தின் மூலம் மானஸ்வி விரைவாக மக்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு பல படங்களில் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். மேலும்,இந்த வருடம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்தில் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி நடித்து இருந்தார். அதே போல கொட்டாச்சி மகள் மானஸ்வி மலையாளத்தில் மை சாண்டா என்ற படத்தில் நடித்து உள்ளார்.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்ததற்கு இவருக்கு அந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது மானஸ்விக்கு கிடைத்து இருந்தது.சமீபத்தில் நடிகர் கொட்டாச்சி மகள் மானஸ்வி பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். தனது மகளுக்கு பிறந்தநாள் பரிசாக 13 லட்ச ரூபாய் கார் ஒன்றை பரிசாக அளித்து இருந்தார் கொட்டாச்சி. இதுகுறித்து அவர் பதிவிட்ட வீடியோவில் ‘ என் தாய் தங்க மகளின் ரொம்ப வருட கனவு அவள் பிறந்தநாள் அன்று கடவுள் அருளோடு இந்த வருடம் நிறத்தறியது.

-விளம்பரம்-

கடவுள் நன்றி’ என்றும் பதிவிட்டு இருந்தார். இதனை கண்ட பலர் வாழ்த்து தெரிவித்தாலும் ஒரு சிலரோ ‘சின்ன பொண்ணுக்கு இவ்ளோ பெரிய கார் தேவை தானா’ என்று விமர்சனம் செய்தனர். இப்படி ஒரு நிலையில் இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ள கொட்டாச்சி ‘ பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற 13. லட்சம் என்றாலும் லோன் வாங்கி சந்தோஷப்படுத்தலாம் கஷ்டம் கஷ்டம் என்று நினைத்துக் கொண்டு இருந்தால் கடைசியில் கஷ்டம் மட்டுமே ஜெயிக்கும்.

வாழும் நாட்களையும் சந்தோஷத்தை இழந்து விடுவோம் நம்ம தாய் தந்தை ஏழை ஆனாலும் நம் நம்மளை சந்தோஷப்படுத்தி பார்க்க முடியவில்லை நாம் சந்தோஷப்படுத்தி பார்க்க தாய் தந்தை இல்லை மகளே தாய் தந்தையாக நினைத்து சந்தோஷப்படுத்தி பார்க்கிறேன் . அன்பே சிவம், ஜெயிப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement