‘எனக்கு இந்த அசிங்கம் தேவையில்லை’ பணியில் இருந்து நீக்கிய உரிமையாளர் – தேம்பி அழுத பெண் ஓட்டுநர் ஷர்மிளா

0
3065
Sharmila
- Advertisement -

கோவை பெண் ஓட்டுனர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில மாதங்களாகவே சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருந்தவர் கோவை ஷர்மிளா. இவர் கோவை தனியார் பேருந்தில் பெண் டிரைவராக புகழ் பெற்றவர். இவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுநர். தன்னுடைய தந்தையின் மூலமாகத்தான் இவர் ஓட்டுநர் தொழிலை கற்றுக் கொண்டார்,

-விளம்பரம்-

தன்னுடைய தந்தை ஆசையை நிறைவேற்றுவதற்காக இவர் கனரக வாகனங்களை ஓட்ட பழகினார். பின் போராடி தனியார் பேருந்தில் டிரைவர் ஆனார். கொஞ்ச நாட்களிலேயே இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார். பொதுவாகவே பேருந்துகளை ஆண்கள் தான் அதிகம் ஓட்டுவார்கள். இப்படி இருக்கும் சூழலில் ஷர்மிளாவின் இந்த முயற்சி அனைவர் மத்தியிலும் பாராட்டப் பெற்றிருந்தது. தமிழக முழுவதுமே இவரை பற்றி பரவலாக பேசியிருந்தார்கள்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே இவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். சமீபத்தில் கூட பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் ஏறி சிறிது நேரம் பயணித்து அவரிடம் கலகலப்பாக பேசி பாராட்டியும் இருந்தார். பின் திமுக துணை பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி அவர்கள் கோவையில் பல நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார். அப்போது அவர் ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் பயணித்திருந்தார்.

அப்போது அவர் சர்மிளாவை கட்டி அணைத்து பாராட்டி கைக்கடிகாரம் ஒன்றியம் பரிசாக அளித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கனிமொழி எம்பி பேருந்தில் பயணித்த சிறிது நேரத்திலேயே சர்மிளா டிரைவர் பணியில் இருந்து நீக்கம் செய்து இருக்கிற தகவல் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், ஷர்மிளா ஓட்டும் தனியார் பேருந்தில் பெண் கண்டக்டர் ஒருவர் இருந்தார். கனிமொழி அவர்கள் பேருந்தில் பயணித்தபோது பெண் கண்டக்டர் அவரிடம் டிக்கெட் கேட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அப்போது சர்மிளா எம்பியிடம் டிக்கெட் கேட்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், கனிமொழி ஏற்கனவே டிக்கெட் எடுத்திருக்கிறார். பின் கனிமொழி இறங்கிய சிறிது நேரத்திலேயே அந்த பெண் கண்ரக்டருக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதை எடுத்து பஸ்ஸை அலுவலகத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார்கள். அங்கு பெண் கண்டக்டர் ஒரு மாதிரியாக பேசுகிறார் நான் ரிலீவ் ஆகிக்கொள்கிறேன் என்று சர்மிளா ஏற்கனவே கூறியிருக்கிறார். ஆனால், பிரச்சனையின் போது கேட்டபோது மேனேஜர் அப்படியெல்லாம் அவர் கூறவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

இதனால் மணமடைந்த ஷர்மிளா நான் இதற்கு பொய் சொல் வேணா? நான் உண்மையிலேயே சொல்லிவிட்டேன் என்று கண்ணீர் மல்க நிறுவனத்திற்கு வெளியே நின்று இருக்கிறார். இதனை அடுத்து இது தொடர்பாக ஷர்மிளா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், யாராக இருந்தாலும் மரியாதை ரொம்ப முக்கியம். எந்த தவறும் செய்யாமல் நான் தண்டிக்கப்பட்டு இருக்கிறேன். இப்ப புது கண்டக்டர் வந்தவுடன் என்னை தேவையில்லை என்று தூக்கி போட்டு விட்டார்கள். என்னுடைய அலுவலகத்திலேயே என்னைப் பற்றி என் காதுப்படவே பலரும் தவறாக பேசியிருக்கிறார்கள். நான் அதைப்பற்றி எல்லாம் பொருட்படுத்தவில்லை. பொறுத்துக் கொண்டுதான் வேலை செய்திருக்கிறேன்.

நான் லட்சியத்துக்காக தான் இந்த வேலையில் சேர்ந்தேன். கொடுக்கிற 1300 சம்பளத்திற்காக நான் இதை செய்யவில்லை. ஒரு ஆட்டோ ஒட்டி கூட இந்த சம்பளத்தை என்னால் வாங்க முடியும். இருந்தாலும், என்னுடைய லட்சியத்துக்காக நான் போராடினேன். ஒரு வருடமாவது இந்த வண்டியை ஓட்ட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என்னால் முடியவில்லை. மூன்று மாதம் ஓட்டினது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. இனி நான் ஆட்டோ வாங்கி ஓட்டிக்கொள்வேன் என்று ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்

Advertisement