கோவை சரளா நடிக்கும் படங்கள்:
தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு தான் வருகிறார். தற்போது இவர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருண் நடிப்பில் உருவாகி இருக்கும் தி லெஜன்ட் படம், பிரபுசாலமன் இயக்கத்தில் அஸ்வின் நடிப்பில் உருவாகி வரும் செம்பி, ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் நூறு கோடி வானவில், ஜெயிக்கிற குதிர, ஆயிரம் ஜென்மங்கள், இட்லி, கோப்பெருந்தேவி போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் கோவை சரளா கொடி கட்டி பறந்தாலும் குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற வில்லை என்று தான் சொல்லணும். இவருக்கு நான்கு அக்கா, ஒரு அண்ணன். கோவை சரளா தான் கடை குட்டி.
கோவை சரளாவின் குடும்பம்:
தற்போது வரை கோவை சரளா திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது சகோதரி,சகோதரன் பிள்ளைகளையே அவர் படிக்க வைத்து வருகிறார். மேலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய சகோதரன் சகோதரிக்காக கோவை சரளா அர்ப்பணித்து விட்டார் என்று சொல்லலாம். இந்நிலையில் நடிகை கோவை சரளாவின் சொந்த ஊர், வீடு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. நடிகை கோவை சரளா அவர்கள் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அது அவர் பிறந்த ஊர் இல்லை.
கோவை சரளாவின் வீடு:
வேலைக்காக கோவை சரளாவின் மொத்த குடும்பமும் கோவைக்கு வந்து விட்டார்கள். ஒரு வாடகை வீட்டில் கோவை சரளாவின் மொத்த குடும்பமும் வாழ்ந்திருந்தது. 15 வயது வரை கோவை சரளா அந்த வீட்டில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். கோவை சரளாவின் படிப்பு விவரம் பற்றி தெரியவில்லை என்றாலும் அவர் மேடை நாடகங்களில் சிறு வயதிலிருந்தே நடித்திருந்தார் என்று அக்கம் பக்கத்தினர் கூறி இருக்கிறார்கள். சரளாவின் 15 வயதிற்கு பிறகு அந்த வீட்டை விட்டு கோவை சரளாவும் அவருடைய குடும்பமும் வெளியேறி விட்டார்கள்.
கோவை சரளாவின் அம்மா:
தற்போது கோவை மாவட்டத்திலேயே கோவை சரளாவின் சொந்த வீடு ஒன்று இருக்கிறது. அங்கு அவருடைய அம்மாவிற்காக ஒரு வீடும், சென்னையில் ஷூட்டிங் போக பிற நேரங்களில் கோவை சரளா வந்து வசிப்பதற்கு ஒரு வீடு இருக்கிறது. சரளாவின் அம்மாவிற்கு 94 வயது ஆகிறது. தற்போது அவர் ஆரோக்கியமாகவும், நல்ல தெளிவாக பேசியும் நடமாடிக் கொண்டு இருக்கிறார். அவருடைய வீட்டிற்கு