‘இந்தம்மா ஏய்’ – மாரிமுத்துவுடன் Kpy பாலா கடந்த மாதம் எடுத்த வீடியோ. புகைப்படத்தை பகிர்ந்து பாலா உருக்கம்.

0
1701
KpyBala
- Advertisement -

எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு கே பி ஒய் பாலா தெரிவித்திருக்கும் இரங்கல் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. சீரியலில் இவர் மதுரை ஸ்லாங்கில் பேசி வில்லனாக நடித்து இருக்கிறார். இந்த சீரியலில் இவருடைய பஞ்சுகள், வசனங்கள் எல்லாமே பார்வையாளர் மத்தியில் ஈர்ப்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து. இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தமிழில் இவர் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

- Advertisement -

மாரிமுத்து திரைப்பயணம்:

ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து ரசிகர்கள் முதலில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை எடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார்.

மாரிமுத்து திடீர் மரணம் :

இந்த படத்தை சங்கர் இயக்கி வருகிறார். இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலிலும் பட்டய கிளப்பி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார். டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி வந்து இருக்கிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்த செல்லப்பட்ட போது போகும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

kpy பாலா இரங்கல்:

இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவரின் இழப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த பாலா தன்னுடைய இரங்கலை தெரிவித்து இருக்கிறார். அதில் அவர், என்னால இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை சார். எம்மா ஏய் என்ற வார்த்தை இனி கேட்க முடியாது. உங்களிடத்தை யாராலும் ரீப்லேஸ் செய்ய முடியாது. லவ் யூ சார் என்று கூறியிருக்கிறார்.

பாலா வெளியிட்ட வீடியோ:

அதோடு, கடந்த மாதம் தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாரிமுத்து உடன் எடுத்த வீடியோவை பாலா பகிர்ந்திருந்தார். அதில் அவர், ஒரு அறையில் ஒரு பக்கத்தில் மாரிமுத்து இன்னொரு பக்கத்தின் பாலா நின்று கொண்டு மாரிமுத்து போல இந்தம்மா ஏய் என்ற டயலாக்கை பேசுகிறார். உடனே மாரிமுத்துவும் பேசுகிறார். இந்த வீடியோவை தான் அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். தற்போது இதை ரசிகர்கள் பதிவிட்டு யாராலும் நம்ப முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு என்று கூறி இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement