Plastic Surgery செய்துகொண்டு அதை மாற்றினேனா ? இளம் நடிகை கீர்த்தி செட்டி பதில்

0
1375
Kriti
- Advertisement -

பிளாஸ்டிக் சர்ஜரியால் முகம் மாறியிருக்கிறது என்று எழுந்த சர்ச்சைக்கு கீர்த்தி செட்டி கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் கீர்த்தி ஷெட்டி. இவர் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்தார். பின் தொடர்ந்து இவர் விளம்பர படங்களில் நடித்து தன்னுடைய அழகாலும் புன்னகையாலும் ரசிகர்களை கவர்ந்தார்.

-விளம்பரம்-

பிரபல தெலுங்கு நடிகரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் உப்பனா. இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மீண்டும் இவர் வைஷ்ணவ் தேஜ் உடன் ‘2 கண்ட்ரிஸ்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

கீர்த்தி ஷெட்டி திரைப்பயணம்:

பின் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் உருவாகி இருக்கும் படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு ‘ஷ்யாம் சிங்கா ராய்’ என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கி இருக்கிறார். இது மறுபிறவியை மையமாக கொண்ட படம். இப்படத்தில் நானி, சாய் பல்லவி, மடோனா, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

கீர்த்தி ஷெட்டி நடித்த படங்கள்:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது இவர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கஸ்டடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சரத்குமார், அரவிந்த சாமி, வெண்ணிலா கிஷோர், சம்பத் ராஜ், சாமி, அமரன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கீர்த்தி ஷெட்டி செய்த பிளாஸ்டிக் சர்ஜரி:

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இதனை அடுத்து கீர்த்தி செட்டி பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த விலையில் கீர்த்தி செட்டி பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார் என்ற வதந்தி சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தது.

கீர்த்தி ஷெட்டி அளித்த பேட்டி:

இதற்கு பேட்டி ஒன்றில் கீர்த்தி செட்டி கூறியிருந்தது, நான் சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். அதை வைத்து என் முகம் மாறி இருக்கிறது என்று சொல்வது உண்மை இல்லை. படத்தில் இருந்தது போல் என் முகம் உப்பென இல்லை என்கிறார்கள். மேக்கப் போட்டால் உடலில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான். வயது அதிகரிக்கும் போது உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று கூறியிருக்கிறார்.

Advertisement