தனது மகள்களுடன் வாக்களிக்க வந்த கே எஸ் ரவிக்குமார் – இவருக்கு இவ்ளோ பெரிய மகள்கள் இருக்காங்களா.

0
500
ks
- Advertisement -

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தல் படு மும்மரமாக நடைபெற்றுமுடிந்தது. கொரோனா பிரச்சனை காரணமாக வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம், சாணிடைஸர் என்று அணைத்து வகை பாதுகாப்புகளும் கடைக்கிப்பிடிக்கப்பட்டுஇருந்தது . தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.இந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் கடந்த பல்வேறு மக்களும் ஆவலுடன் வாக்களித்தனர்.

-விளம்பரம்-

அதே போல தமிழ் சினிமா பிரபலன்களான ரஜினி, கமல், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, அருண் விஜய், ஜீவா, விஷ்ணு விஷால், சரத்குமார், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு சினிமா பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர். அதிலும் தேர்தலின் போது வாக்கு செலுத்த வந்த போது அஜித், ரசிகரின் செல்போனை புடிங்கியது, விஜய் சைக்கிளில் வந்தது போன்றவை முதல் பேசும் பொருளானது.இப்படி ஒரு நிலையில் நடிகர் கே எஸ் ரவிகுமார் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலின் போது தனது குடும்பத்தோடு வந்து வாக்களித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரமிக்க வைக்கும் பல பிரமாதமான படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் கே. எஸ். ரவிகுமார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் குமார், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார். அதோடு இவரை சீனியர் டைரக்டர் என்று கூட சொல்லலாம். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப் பெரிய சாதனை படைத்து உள்ளது. மேலும், இவர் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பார். இது வழக்கமான ஒன்றாக கே. எஸ். ரவிகுமார் வைத்து உள்ளார்.

கே. எஸ். ரவிகுமார் அவர்கள் முதன் முதலில் இயக்குனர் விக்ரமன் இடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு தான் இவர் புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, முத்து, வில்லன், வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், இவர் இயக்கிய பல படங்கள் பிளாக் பஸ்டர் தான். கே எஸ் ரவிக்குமார் அவர்கள் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜஸ்வந்தி, ஜனனி, மோனிஷா என்று 3 மகள்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

Advertisement