நோயில் சிக்கிய முதல் கணவருக்கு உதவியதால் 2-ம் கணவரால் ஏற்பட்ட பிரச்சனை – குட்டி பத்மினி வாழ்வில் இவ்வளவு சோகமா?

0
5016
Kutty
- Advertisement -

தென்னிந்த திரை உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் குட்டி பத்மினி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது வரை இவர் படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

60, 70 காலகட்டம் தொடங்கி இப்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், இவர் நடிகை மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர், பெண் தொழிலதிபர் என பன்முகங்களைக் கொண்ட திகழ்கிறார். அதோடு இவர் தனியாக youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் முன்னணி நடிகைகள் மற்றும் திரைத்துறை அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். கடைசியாக இவர் தமிழில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த உத்தரவு மகாராஜா என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

தற்போது இவர் வெப் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் குட்டி பத்மி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து கூறியது, என் முதல் கணவருக்கும் எனக்கும் சின்ன சின்ன பிரச்சனை இருந்தது. நாங்கள் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். இருந்தாலும், எனக்கும் அவருக்கும் இடையே நிறைய பிரச்சனைகள் வந்திருக்கிறது. அவருக்காக நான் பல விஷயங்களை விட்டுக்கொடுத்தேன். இதனால் சினிமாவில் இருந்து சிறிது காலம் நான் விலகி இருந்தேன்.

ஆனால், என்னை நம்பி பல பேர் இருந்ததால் மீண்டும் நான் நடிக்க தொடங்கினேன். பின் எங்கள் இருவருக்கும் பிரச்சனை வந்து பிரிந்து விட்டோம். அதற்கு பிறகு நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய இரண்டாவது கணவரையும் பிரிந்து விட்டேன். அப்போது என்னுடைய முதல் கணவருக்கு கஷ்டம் என்பதால் உதவி செய்தேன். இதனால் சில பிரச்சினைகள் வந்தது. 21 வயதில் ஒரு டிவி சீரியல் நடித்த போதுதான் முதன்முதலில் முதியோர் இல்லத்தை பார்த்தேன். அதன் பிறகு சினிமா துறையில் உள்ளவர்களுக்காக முதியோர் இல்லம் அமைக்க வேண்டும் என்று நினைத்து பலருக்கும் உதவும் எண்ணம் இருக்கு.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் போது எனக்கு என் முதல் கணவருக்கு உதவும் எண்ணம் இருக்கக் கூடாதா? அவரை எப்படி கவனிக்காமல் இருக்க முடியும். என்ன தான் இருந்தாலும் என் முதல் கணவருடன் வாழ்ந்திருக்கிறேன். என் குழந்தைக்கு அவர் அப்பா. என் மகள் அமெரிக்காவில் இருந்து போன் செய்து அப்பாவுக்கு அடிபட்டிருக்கிறது என்று சொன்னார். அதனால் தான் அவரை மருத்துவமனையில் சந்தித்து உதவி செய்தேன். அப்போது என்னுடைய இரண்டாவது கணவரை பிரிந்திருந்தேன். ஊர் என்ன சொன்னாலும்? இப்போது தான் இரண்டாவது கணவரை பிரிந்து இருக்கிறீர்கள் கொஞ்சம் யோசிங்கள் என்று சொன்னார்கள்.

என்னை விட்டுப் போனவர் என்னை தப்பா நினைத்தால் என்றாலும் எனக்கு கவலை இல்லை. என் முதல் கணவருக்கு ரூம் கொடுத்தேன். அவருக்கு மாத முப்பதாயிரம் ரூபாய் செலவுக்கு பணம் கொடுத்தேன். அட்மின் வேலை கொடுத்து தினமும் வருவார். என்னுடைய இரண்டாவது கணவர் ஒருநாள் போன் செய்து என் முதல் கணவர் வந்துவிட்டார் போல சந்தோஷமா? என்று கேட்டார். ஆமாம், உங்களுக்கு என்ன வயிற்று எரிச்சல் என்று கேட்டேன். உடனே அருகில் இருந்த என் மகள் எப்படி அம்மாவை இப்படி கேட்கலாம் என்று சண்டை போட்டார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement