நடிகை போட்ட ஒரு ட்விட்டால் பிரபல நிறுவனத்துக்கு ரூ. 8400 கோடி நஷ்டம் !

0
2884
Kylie jenner

தற்போது பிரளங்கள் அனைவரும் தனது அன்றாட நடவடிக்கைகளும் சரி ,தங்களது படங்கள் பற்றின தகவல்களையும் சரி அதனை முதலில் சமூக வலைதளத்தில் தான் முதலில் பதிவிடுகின்றனர்.

பேஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,போன்ற பல சமூக வலைதளங்கள் அனைத்தும் பிரபலங்களையே சார்ந்துள்ளது என்று தற்போது நடைபெற்ற சம்பவம் ஒன்று நிரூபித்துள்ளது.பேஸ் புக்,ட்விட்டர் போன்ற ஒரு சமூக ஊடகம் தான் ஸ்னப் சேட். இதிலும் பல பிரளங்கள் மேம்பர்களாக உள்ளனர்.கெய்லி ஜென்னர் என்னும் அமெரிக்க தொலைகாட்சி பிரபலம் ஏற்கனவே சமூவுக வலைதளத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் என்ற பட்டியலில் இடம் பெற்றவர்.

இவர் கடந்த 22 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் என்னைப்போன் ஸ்னப் சேட்டை யாரேனும் பயன்படுத்தாமல் இருக்கிறீர்களா ?என்று பதிவை போட்டுள்ளார் அந்த பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர் இந்த பதிவிற்கு தற்போது 6 லட்சம் லைக்குகள் வேறு வந்துள்ளது.இவரது பதிவால் ஸ்னப் சேட்டின் சந்தை மதிப்பு 6.1 சதவீதம் சரிந்துள்ளது.இதனால் ஸ்னப் சேட்டிற்கு 1.3 பில்லியன் டாலர் அதாவது இந்திய பண மதிப்பின்படி சுமார் 8400 கோடி இழப்படைத்துள்ளது. ஒரு பிரபலத்தின் சாதாரண ஒரு கருத்துக்கு ஒரு நிறுவனம் இவ்வளவு இழப்பை அடையுமா என்று பலரும் வியந்துள்ளனர்.