லட்சுமி குறும்படத்தில் இதை உங்களால் உணரமுடிகிறதா ! பார்ப்பவன் கண்ணைப் பொருத்ததாம்

0
2279
lakshmi
- Advertisement -

சமீபத்தில் வெளியான ‘லட்சுமி’ குறும்டம் தற்போது வரை அனைவரது பார்வையையும், அவரகளின் விமர்சன தாக்குதல்களையும் பெற்று வருகிறது. படத்தின் கதைக்கருவும் பெண்ணைப் பற்றிய பார்வையை சொல்லிய விதம் அப்படி.
lakshmiகதைப்படி, வழக்கமான மிடில் க்ளாஸ் போல் எப்போதும் ஒரு சின்ன குடும்பத்தின் மனைவியாக வருகிறார் லட்சுமி ப்ரியா. இந்த படத்தில் இயந்திர வாழ்க்கையில் இருக்கும் லட்சுமி வீட்டில் நிமிடம் சிரித்துக் கூட பேச முடியாத கணவனுடன் உடலுறவில் கூட திருப்தி இல்லாமல் வாழ்கிறார்.

-விளம்பரம்-

இதனால், மனக் குமுறல்களுடன் இருக்கும் லட்சுமியை திடீரென ஆராதனைகளுடன் ஒரு புதிய ஆண் அவளைக் கவர்கிறான். இனம் புரியாத மகிழ்ச்சியில் அவனுடன் சென்று ஒர் இரவை அவளின் ஆசையுடன் சல்லாபித்து கழிக்கிறாள். பின்னர் அடுத்த நாளில் இருந்து அந்த ஆடவனை தவிர்க்கவும் செய்கிறார்.
lakshmiஇந்த படத்தினை ஒரு தரப்பு, இவள் பெண்களுக்கான இழுக்கு எனவும் இன்னொரு பெண்ணிய வாதித் தரப்பு பாரதி கண்ட புதுமைப் பெண்ணடி இவள் எனவும் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க: தன்னை ஆபாசமாக மீம்ஸ் போடுபவர்களுக்கு பதிலடி கொடுத்த “லட்சுமி” !

இந்நிலையில் இந்த கேரக்டரில் நடித்த, லட்சுமி ப்ரியா சந்திரமவுலி விமர்சனங்களின் மீதான தனது எண்ணத்தைப் பகிர்ந்திருக்கிறார்,
இப்படம் சமூகத்தை சீர்திருத்த எடுக்கப்படவில்லை, சாதாரண ஒரு பெண்ணின் கதை அவ்வளவு தான்,
lakshmiலட்சுமியை நல்ல பெண்ணாக பார்த்தால் அவள் நல்ல பெண், கெட்டவளாக பார்த்தால் அவள் கெட்ட பெண், இது பார்ப்பவர்களின் எண்ணத்தைப் பொருத்தது.எனக் கூறியிருக்கிறார் லட்சுமி ப்ரியா.

-விளம்பரம்-
Advertisement