அந்த காட்சிகளில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் – மாமன்னன் படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்.

0
1737
Lakshmiramakrishnan
- Advertisement -

மாமன்னன் படத்தில் எனக்கு சில மாற்று கருத்து இருக்கிறது என்று நடிகையும்,இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்டிருக்கும் ட்வீட் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் தான் உதயநிதியின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மாமன்னன் படம்:

மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது.
படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் முன்னேற பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம். இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் கூறி இருக்கிறார்.

மாமன்னன் படம் குறித்த தகவல்:

இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருந்தது மட்டும் இல்லாமல் வசூலிலும் சாதனை படடித்து இருந்தது. இதனால் படக்குழு சமீபத்தில் வெற்றி விழா நடத்தி இருந்தது. அதன் பின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படம் Netflix தளத்தில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

லட்சுமி ராமகிருஷ்ணன் ட்வீட் :

இந்த நிலையில் மாமன்னன் படம் குறித்து நடிகையும்,இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ட்வீட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், “மாமன்னன் படம் பார்த்தேன். மாரி செல்வராஜின் மற்றொரு சிறந்த படைப்பு. படத்தில் காட்டப்பட்டிருக்கும் வன்முறை காட்சிகள் சிலவற்றில் எனக்கு மாற்று கருத்து இருந்தாலும், மற்ற காட்சிகள் அதனை மறக்க வைக்கிறது. சில காட்சிகள் என் இதய துடிப்பை நிறுத்திவிட்டன. உதயநிதி ஸ்டாலின் இதுவரை இல்லாத வகையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மாரி செல்வராஜ் பதில்:

கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்படவில்லை என தோன்றுகிறது. வில்லனின் மனைவி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மாரிசெல்வராஜ் தான் சொல்ல நினைத்ததை மிகுந்த அக்கறையுடன் தெளிவாக சொல்லியிருப்பதாக உணர்கிறேன்” என்று கூறி இருக்கிறார். இதனை பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி என்று பதில் டீவ்ட் போட்டு இருக்கிறார்.

Advertisement