‘பட்டத்த தூக்க 100 பேரு’ என்ற வரி வந்ததும் ஜெயிலர் lyricist செய்த செய்கை – அப்போ கண்டிப்பா இது விஜய்க்கு எழுதன வரி தானா ?

0
2217
- Advertisement -

ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் ‘ஹக்கும்’ பாடல் ஆசிரியர் செய்த ரியாக்ஷன் தான் தற்போது விஜய் ரசிகர்ளை மேலும் காண்டாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து இருக்கிறது. ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

குறிப்பாக, கடைசியாக வந்த “அண்ணாத்த” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையை அடுத்து தற்போது ரஜினி நடிக்கும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை.

- Advertisement -

எனவே இவருக்கும் “ஜெயிலர்” படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதினால் மும்முரமாக படம் இயக்குவதில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தின் ஹக்கும் பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அந்த பாடல் வரிகளில் ம் ‘ உன் அளும்ப பாத்தவன்… உன் ங்கொப்பன் விசில கேட்டவன்… உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்… பேர தூக்க நாலு பேரு… பட்டத்த பறிக்க நூறு பேரு… குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு’ என்ற வரிகள் ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை உயர்த்திபிடிப்பது போல இருந்தது.

அதிலும் குறிப்பாக ‘பட்டத்த பறிக்க நூறு பேரு’ என்ற வரிகள் விஜயை தாக்கி எழுதப்பபட்டு இருப்பது போல சர்ச்சை வெடித்தது. ஏனென்றால் தற்போது விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் ரசிகர்களும், ரஜினி தான் எப்போதும் சூப்பர் ஸ்டார் என்று ரஜினி ரசிகர்களும் அடிக்கடி சண்டையிட்டு கொண்டு வருகின்றனர். இதனால் இந்த வரிகளை பாடலாசிரியர் சூப்பர் சுப்பு விஜயை தாக்கி எழுதி இருக்கிறார் என்று சர்ச்சை வெடித்தது.

-விளம்பரம்-

அதே போல இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி சொன்ன ‘பருந்து காக்க’ கதையும் விஜய் ரசிகர்களை சீண்டியது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ‘ஹக்கும்’ பாடல் ஒலித்த போது மேடையின் கீழ் இருந்த பாடலாசிரியர் சூப்பர் சுப்பு ஆரவாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது சரியாக ‘பட்டத்த பறிக்க நூறு பேரு’ என்ற வரி வந்த போது அவர் விஜய்யின் ட்ரேட் மார்க் நடன அசைவை செய்து இருந்தார்.

தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் சூப்பர் சுப்பு ‘பட்டத்த பறிக்க நூறு பேரு’ என்ற வரியை கண்டிப்பாக விஜய்யை குறிப்பிட்டு தான் எழுதி இருக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், பேட்டி ஒன்றில் பேசிய சூப்பர் சுப்பு ‘. எனக்கு எப்போதுமே தலைவர் சூப்பர் ஸ்டார் தான். இது உலகத்துக்கே தெரியும். அதோட விஜய் சாரே ரஜினி சார் தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்வார்.

உண்மையிலேயே இதை ஒரு பிரச்சனையாக பார்த்தால் பிரச்சனை தான். பிரச்சனை செய்ய வேண்டும் என்று இதை சிலர் செய்கிறார்கள்.மேலும், பாடல் வரிகளை கேட்டுவிட்டு ரஜினி சார் “இந்த பாடல் பேன்ஸ் மத்தியில் வேற லெவெலில் போகும் சுப்பு ” என்று வாய்ஸ் நோட் மூலம் என்னை வாழ்த்தினார் என்று ஹுக்கும் பாடலின் லிரிசிஸ்ட்’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement