கிரேஸி மோகன் மேடை நாடகங்களில் உயிர் நாடி – பிறந்தநாளில் அறிவோம் நடிகர் சீனு மோகனை

0
1662
- Advertisement -

நடிகர் கிரேசி மோகனின் மேடை நாடகங்களில் உயிர்நாடியாக இருந்த சீனு மோகன் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே, சினிமா உலகில் காமெடியுடன் கலந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சிலர் தான். அந்த வரிசையில் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பதித்தவர் சீனு மோகன். 1970களில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் கிரேசி மோகன். இவர் வசனகர்த்தா நடிகர் என பன்முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

இவருடைய நாடக குழுவில் ஒருவராக இருந்தவர் தான் மோகன். கிரேசி மோகன் பல்வேறு நாடகங்களை நடத்தி இருக்கிறார். அதில் எல்லாம் மோகன் நடித்திருக்கிறார். அந்த வகையில் ஒரு முறை இவர் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு சீனு மோகன் என்று பெயர் மாறியது. மேலும், கிரேசி மோகன் அவர்களின் காமெடி ட்ரூப்பில் உயிர்நாடியாக சீனு மோகன் திகழ்ந்தார். அனைத்து நாடகங்களிலும் இவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இவருடைய கதாபாத்திரம் தனித்துவமாகவே தெரிந்தது.

- Advertisement -

சீனு மோகன் தனித்தண்மை:

டைமிங்கில் காமெடி பண்ணுவது சீனு மோகனுடைய ஸ்பெஷல். காட்சிக்கு ஏற்றார் போல் அவருடைய முகபாவனைகளும் நாடகத்திற்கு பக்கபலமாக இருக்கும். இதனாலே பல மேடைகளில் பலரும் இவரை பாராட்டி இருந்தார்கள். ஒரு கட்டத்தில் கிரேசி மோகன் ட்ரூப்பில் நடிக்க வாய்ப்பு கேட்டு வருபவரை ஸ்கிரீன் டெஸ்ட் செய்யும் வேலைகளிலும் சீனு மோகன் ஈடுபட்டிருந்தார். அப்படி அவர் தேர்வு செய்தவர்களில் ஒருவர்தான் சாம்ஸ். இவர் தமிழ் சினிமா உலகில் பல காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்.

சீனு மோகன் குறித்த தகவல்:

பின் நாளடைவில் மேடை நாடகம் நடித்து கொண்டிருந்த சீனு மோகனுக்கும் சினிமா வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பாசில் இயக்கத்தில் கார்த்திக் நடித்த வருஷம் 16 என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் சீனு நடித்திருந்தார். அதன் பின்னர் மணிரத்தினத்தின் அஞ்சலி, தளபதி, இருவர் போன்ற படங்களிலும் இவர் நடித்தார். அதேபோல் பாசி இயக்கத்தில் மம்மூட்டி கனகா நடித்த கிளிப்பேச்சு கேட்கவா, தலைவாசல் போன்ற பல படங்களிலும் இவர் நடித்திருந்தார். இப்படி இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தாலும், மேடை நாடகங்கள் மீது இவர் கொண்ட ஆர்வம் குறையவே இல்லை.

-விளம்பரம்-

சீனு மோகன் நடித்த படங்கள்:

இதனால் இவர் தொடர்ந்து மேடை நாடகங்களிலும் படங்களிலும் நடித்துக் கொண்டு வந்தார். பின் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெர்ரி என்ற படத்தில் நடித்த பிறகு சீனு மோகனுக்கு பெரியதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் இவர் மேடை நாடகங்களில் மட்டும் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இறைவி படத்தில் மீண்டும் சீனு மோகன் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை, ஸ்கெட்ச், கோலமாவு கோகிலா போன்ற அடுத்த அடுத்த படங்களில் நடித்திருந்தார்.

சீனு மோகன் பிறந்தநாள்:

மேலும், இவர் சினிமா படங்களில் மட்டும் இல்லாமல் டிவி சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். சீனு மோகன் கடைசியாக நடித்த படம் வசந்த் இயக்கிய சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் தான். இப்படி புகழ்பெற்ற சீனு மகன் 2018 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக மாரடைப்பால் இறந்துவிட்டார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த சீனு மோகனுக்கு இன்று பிறந்தநாள். இதனை அடுத்து சோசியல் மீடியாவில் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement