கணவரும் இல்ல, இப்போ அம்மாவும் போய்ட்டாங்க, குழந்தையோடு அனாதையா நிக்குறேன் – சிந்து மகள் கண்ணீர்.

0
1649
- Advertisement -

சமீபத்தில் உயிரிழந்த சிந்துவின் மகள் தன்னுடைய அம்மாவின் உயிரிப்பு பற்றியும் தன்னுடைய கணவர் இறந்தது குறிந்து கண்ணீர் மல்க பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அம்மா உயிரிழந்து பற்றி சினிமா வட்டாரங்களில் பல பெருக்கு தெரியவில்லை. தற்போது தான் கால் பண்ணி கேட்டு கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது தாய் சிந்து புற்றுநோய் காரணமாக கடந்த வாரம் அவர் உயிரிழந்தது பற்றியும் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

-விளம்பரம்-

பேட்டியில் அவர் கூறியது:

அம்மா மூன்று மாதங்களாக புற்றுநோயால் பெரும் அவஸ்தைபட்டு வந்தார். அம்மாவுக்கு ஆயுர்வேதிக் ஹோமியோபதி என்று எல்லாம் பார்த்தோம் ஆனால் அவருக்கு புற்றுநோய் அடுத்த கட்டத்திற்கு சென்றது. அதன் பின் அவரின் வலிகளுக்கு மட்டும் மருந்துகளை கொடுத்து வந்தோம். கடந்த மூன்று மாதங்களாக அம்மாவால் ஏதும் செய்ய முடியவில்லை அவருக்கு நுரையிரலில் தண்ணீர் ஏறியதால் சுவாசிக்க மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். அதன் பின் அவருக்கு ரொம்ப முடியாமல் ஆனது. அதனால் ராமச்சந்திர மருத்துவமனை சென்றோம் அதன் பின் ஓமந்துரார்க்கு சென்றோம் அங்கேயும் மிகவும் கஷ்டப்பட்டு வந்தோம் புச்சி முருகன் சார் நங்கள் எல்லறோம் ட்ரை பண்ணோம் ஆனாலும் அங்கேயும் அந்த அளவு வசதிகள் இல்லை என வேற மருத்துவ மனையை சேர்க்க சொன்னார்கள்.

- Advertisement -

அம்மாவின் நண்பர் ஜேம்ஸ் என்பரின் உதவியுடன் அவரின் நண்பர் மருத்துவமனை க்கு சென்றோம் அங்கு நேரடியாக ஆப்ரேஷன் தியேட்டருக்கு தான் அழைத்து சென்றார்கள். அங்கு அம்மாவுக்கு நுரையிரலில் கட்டி தான் உள்ளது அதற்க்கு எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்கள். அதன் பின் தான் அம்மாவிற்கு கிட்னியில் சிறிது பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அம்மா மூன்று மாதங்களாக ஏதும் சாப்பிடவில்லை அவர் ஒரு டம்ளர் கஞ்சி மட்டும் தான் குடித்து வந்தார். அவருக்கு என்னை பற்றி தான் கவலையே என்னுடைய கணவரும் பொங்கல் அன்று இறந்துவிட்டார்.

அம்மாவிற்கு என்னை பற்றி தான் முழு கவலையே எனக்கு வயசு குழந்தை இருக்கிறது. நான் சரண்யா மேடம் கிட்ட பேஷன் டிசைன் படிச்சேன் அதன் பிறகு விட்டுலேயே இருந்தேன் அம்மாவை பார்த்துகிட்டு இருந்தேன். இண்டர்ஸ்டி பக்கம் இருந்து சில பேர் உதவி செய்தார்கள். அவர்கள் புற்றுநோய் இருந்த போது இருந்தே செய்தார்கள். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ப்ளாக் பாண்டி அண்ணன் அப்போது இருந்தே உதவிகளை செய்து வந்தார்.

-விளம்பரம்-

அம்மாவுக்கு புற்று நோய் இருந்து வந்தது லாக்டோன் நேரத்தில் தான் தெரிய வந்தது. அவர் அந்த நேரங்களில் நிறைய சமூக சேவைகளை செய்து வந்தார் அப்போது அடிக்கடி மயக்கம் போட்டு கிழே விழுவார் பிறகு மருத்துவ மனையில் சேர்த்து கேட்ட போது அவர்கள் மார்பக புற்றுநோய் உள்ளது என்று தெரிவித்தனர்.

அவருக்கு ஆப்ரேஷன் பண்ணியும் அது சரி ஆகல. சில பெருக்கு அம்மா இறந்தது தெரியவில்லை தற்போது என்னிடம் கால் பண்ணி பேசிகிட்டு இருக்காங்க.அம்மாவின் இறப்புக்கு பின் விஜய் சேதுபதி சார் கிட்ட சொல்லி இருக்கோம் ஏதும் ரெஸ்பான்ஸ் வரவில்லை. சீமான் சார் கிட்ட சொல்லி இருக்கோம். அம்மாக்கு சினிமா என்றால் ஒரு வெறி அவருக்கு. அம்மாவிடம் யாராவது உதவி கேட்டால் இல்லை என்று சொல்ல மாட்டார் விட்டிற்கு யாராவது வந்தால் கூட எதாவது குடுத்துதான் அனுப்பி வைப்பாங்க. அம்மா ஏதும் சேர்த்து வச்சிக்கல. அம்மா வலி தாங்க முடியாமல் அழுவார்.

அவர் இரவில் தூங்கவே மாட்டார் அந்த அளவுக்கு வலி இருந்துச்சி அவருக்கு. நான் இரவு நேரங்களில் அம்மாவை தேடுகிறேன்.வாழ்க்கைக்கு அம்மாவும் கணவரும் முக்கியம் இரண்டு பெரும் இல்லையென்று நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். அதை எப்படி சொல்லறது என்று தெரியவில்லை. என்றுகண்ணீர் மல்க கூறினார்.                    

Advertisement