நான்கு ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய ஏ வி எம்.! ஹரி இயக்கத்தில் ஹீரோ யார் தெரியுமா.!

0
557
hari

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் சிவாஜி காலம் தொடங்கி தற்போது உள்ள இளைய தலைமுறை வரை பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளது ஏ வி எம் நிறுவனம். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக ஏ வி எம் தயாரிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

ரஜினி, கமல், விஜய் என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த ஏ சி எம் நிறுவனம் இறுதியாக சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ் நடிப்பில் கடந்த 2014 ஆம் வெளியான ‘இதுவும் கடந்து போகும் ‘ என்ற படத்தை தயாரித்துவிட்டு அத்துடன் சினிமாவில் முழுக்கு போட்டது.

இதையும் பாருங்க : இணையத்தில் பரவிய NGK படக்காட்சி..!கெஞ்சிய தயாரிப்பாளர்…! 

- Advertisement -

இருப்பினும் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது பட தயாரிப்பில் களமிறங்கியுள்ளது ஏ வி எம் நிறுவனம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார்.

மேலும், இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு ‘யானை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ஏ.வி.எம் நிறுவனத்தில் இருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக சூர்யாவின் ‘ஐயன்’ படத்தை ஏ வி எம் நிறுவனம் தான் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.