சல்மான்கானை முடிப்பதே எனது வாழ்நாள் லட்சியம் – பிரபல ரெளடி பேட்டி.

0
567
- Advertisement -

சல்மான் கானை முடிப்பதுதான் தன்னுடைய வாழ்நாள் குறிக்கோள் என்று பிரபல ரவுடி கூறியுள்ளது சல்மான் கான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் நடிப்பில் பேலியான படங்கள் அனைத்துமே பெரிய அளவில் ஹிட் கொடுத்தியிருக்கிறது. இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் அவர்கள் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், இடையில் மும்பையில் சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான் கான் வாகனம் மோதிய சம்பவம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் நடிக்க தொடங்கினார். ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பல ஆண்டு காலமாக சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

புல்வாய் மான் வேட்டை சர்ச்சை :

பாலிவுட் சினிமாவில் என்னதான் இவர் முன்னணி நடிகராக இருந்தாலும் இவரின் மீதும் பல விதமான குற்றசாட்டுகள் இருக்கின்றனர் கடந்த 1998ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் இலியானா “ஹாம் சாத் சாத் ஹேன்” என்ற படத்தின் படப்பிடிப்பின் போது அரியவகை புல்வாய் இன வகை மானை சல்மான் கான் வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. புல்வாய் இன மான் இந்தியாவின் வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் பாதுகாக்கப்பட உயிரினமாகவும்.

5 வருடங்கள் சிறை :

அப்படியிருக்க இந்த மானை வேட்டையாடிய காரணத்திற்காக பீஷ்னோய் சமூகத்தினர் நடிகர் சல்மான் கான் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் இவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் சல்மான் கான் ஜாமினில் வெளியில் வந்துவிட்டார். இந்நிலையில் பீஷ்னோய் சமூகத்தை சேந்தவரும் கடந்த 2019ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் பாடகர் சித்து மூஸ் வாலா மரணம் குறித்தும் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்தும் பல முறை பெயர் அடிபட்ட லாரன்ஸ் பீஷ்னோய் சல்மான் கானை தீர்த்து காட்டுவதுதான் தன்னுடைய லட்சியம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ரெளடி லாரன்ஸ் பீஷ்னோய் பேட்டி :

சமீபத்தில் தனியார் சேனல் ஓன்று இவரிடம் பேட்டி எடுத்திருந்தது. அப்போது லாரன்ஸ் பீஷ்னோய் கூறுகையில் ” சல்மான் கான் பிகானேரில் உள்ள எங்களது கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும். சால்மன் கானை முடிப்பது என்னுடைய வாழ்நாள் லட்சியம். சல்மான் கானின் பாதுகாப்பு நீழுகினால் உடனே முடித்து விடுவேன். சல்மான் கான் மன்னிப்பு கேட்டால் இந்த விஷயம் முடிந்துவிடும். ஆனால் சல்மான் கானுக்கு ராவணனை விட அதிக ஈகோ இருக்கிறது. சல்மான் கான் ஒரு திமிரு பிடித்தவர் என்று பேசியுள்ளார்.

முடிப்பது என்னுடைய லட்சியம் :

இந்நிலையில் இப்படி பேசிய லாரன்ஸ் பீஷ்னோய் தற்போது பதிண்டா சிறையில் இருந்து வருவதும். கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக சிறையில் இருந்து கொண்டே சல்மான் கானை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியது தற்போது அம்பலமாகி உள்ளது. இந்நிலையில் லாரன்ஸ் பீஷ்னோய் பேசிய அந்த ஆடியோ பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி சல்மான் கான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement