இது என்ன கோழியா காகாவா – பிரபல உணவகத்தை வெளுத்து வாங்கிய வனிதா.

0
663
- Advertisement -

KFC உணவு நிறுவனத்தை விமர்சித்து பிக் பாஸ் வனிதா போட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவில் மிக பிரபலமான நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்த வனிதா திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனித்தனியாக வசித்து வருகிறார் வனிதா.

- Advertisement -

மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.

வனிதா இன்ஸ்டா பதிவு :

இந்த நிலையில் தான் பிக் பாஸ் வனிதா தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையுடன் வந்திருக்கிறார். அதாவது ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள ராஜீவ் சர்வதேச விமான நிலத்தில் KFC சிக்கன் வாங்கியிருக்கிறார். அப்படி வாங்கிய அவர் தனக்கு வழங்கப்பட்ட சிக்கன் துண்டுகளை விமர்சித்து தன்னுடைய இன்ஸ்டகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் KFCயிடம் வாங்கிய உனது தனக்கு ஏமாற்றத்தை தந்ததாக பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

-விளம்பரம்-

கோழியா – காக்கவா? :

அந்த பதிவில் “மிகவும் மோசமான உணவு, உங்களுடைய வாடிக்கையாளர் அணுகுமுறை மிகவும் மோசமாக இருக்கிறது. உலகத்திலேயே மிகவும் சிறிய கோழியின் இறைச்சியை கண்டுபிடித்து எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். இந்த கரி துண்டுகளை உண்மையில் கோழியுடையதா? அல்லது காகத்தின் இறைச்சியா? என்றும், இதனை நினைத்தால் மிகவும் வருந்துவதாகவும். நீங்கள் இந்தியாவை மிகவும் பெருமை பட வைத்துவிடீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

KFC பதில் :

இவர் போட்டிருந்த பதிவு வைரலான நிலையில் இந்த பதிவிற்கு KFC நிறுவனம் சார்பில் பதிலளித்து உங்களுடைய குறையை கூறுமாறு பதிவிட்டிருந்த்தது. மேலும் இந்த பதிவிற்கு எதிர் பதில் அளித்த பிக் பாஸ் வனிதா “இந்த விஷியத்தை பற்றி இ-மெயிலில் தெரிவிப்பதாகவும், இது போன்று சென்னையில் பல இடங்களில் நடப்பதாக கூறினார். மேலும் உங்களுடைய ஊழியர்களுக்கு அதிக பயிற்சியும், கண்காணிப்பும் தேவை என்று பதிவிட்டிருந்தார் வனிதா, இந்த பதிவு தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement