நெற்றியில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிரபல பாடகி வாணி ஜெயராம்.

0
447
- Advertisement -

தமிழ் சினிமாவில் மூத்த மற்றும் முன்னணி பாடகியான வாணி ஜெயராம் இன்று காலமானார் என்ற செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாலாகி வருகிறது. பாடகி வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி. மலையாளம், கன்னடம் என 19 மொழிகளில் வாணி ஜெயராம் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழில் முள்ளும் மலரும் அபூர்வ ராகங்கள் புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்கள் பல பாடல்களையும் பாடியுள்ளார்.

-விளம்பரம்-

இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கலைவாணி என்ற ஊரில் நவம்பர் 30தேதி 1945ஆம் ஆண்டு பிறந்தார். பாடகி வாணி ஜெயராம் குடும்பம் இசையில் பக்தி மிக்கவர்கள். இவர் கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், ஆர்.எஸ்.மணி போன்றவர்களிடம் தான் இசை பயின்றார். சிறு வயதில் வானொலியில் ஒளிபரப்பாகும் முகம்மது ரபி மற்றும் லதா மங்கேஷ்கர் போன்றவர்களின் பாடல்களை கேட்டு வளர்ந்த இவர் சினிமாவில் பாடவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

திரை அறிமுகம் :

பின்னர் படிப்பிற்க்காக சென்னை வந்த இவர் மேரிக் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்து வங்கியில் வேலை செய்து வந்தார். இவருக்கு இசையின் மீது உள்ள ஆர்வத்தை அறிந்த இவரது கணவர் இவர் ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொள்வதற்கு ஊக்குவித்தார். அதற்கு பிறகு 1971ஆம் ஆண்டு குட்டி என்ற ஹிந்திப்படத்தில் படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமாக்கினார். பின்னர் பல திரைப்படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களையும் பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.

10000க்கும் மேல் பாடல்கள் :

மேலும் இவருக்கு தமிழ் நட்டு, ஆந்திர, ஒடிசா, குஜராத் போன்ற மாநில அரசின் சிறந்த பின்னணி பாடகிக்காக விருது வழங்கப்பட்டது, அதோடு கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தின் போது கூட இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒரூ பாடலை பாடி நன்றி சொல்லியிருந்தார். மேலும் இவர் கடந்த அரை நூற்றாண்டாக 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

-விளம்பரம்-

மறைவு :

இப்படி பட்ட நிலையில் தான் பாடகி வாணி ஜெயராம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயத்துடன் இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 78 வயதாகிறது. இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.பாடகி வாணி ஜெயராம் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், சக்ரவர்த்தி, இளையராஜா, மற்றும் சத்யம் என பல ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement