எங்கு துவங்கும், எங்கு முடியும் – மீண்டும் கேலிக்கு உள்ளான சூர்யாவின் பேட்டிங். கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
513
- Advertisement -

ஐஎஸ்பிஎல் தொடரின் தொடக்கப் போட்டியில் கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து சேர்ந்து சூர்யா விளையாடியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். இந்த விளையாட்டை வருடம் வருடம் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது புதிதாக நடத்தப்படும் ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது இந்த தொடர் முதல் சீசன் நடைபெற இருக்கிறது. இதில் சென்னை அணி மட்டுமில்லாமல் மும்பை, ஹைதராபாத், ஸ்ரீநகர், பெங்களூர், கொல்கத்தா ஆகிய ஆறு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றார்கள். இந்த ஆறு அணிகளையும் சினிமா பிரபலங்கள் தான் வாங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் சென்னை அணியை தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா வாங்கி இருக்கிறார். பின் ஹைதராபாத் அணியை ராம்சரண், மும்பை அணியை அமிதாப்பச்சன், ஸ்ரீநகர் அணியை அபிஷேக் பச்சன், பெங்களூரு அணியை ரித்திக் ரோஷன் ஆகியோர் வாங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

ஐஎஸ்பிஎல் விளையாட்டு:

இந்த அணிகளை பிரபலப்படுத்தும் வகையில் நேற்று சினிமா பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து பிரெண்ட்லி மேட்ச் விளையாடி இருக்கிறார்கள். இதில் கிரிக்கெட் பிரபலங்களின் அணியில் சூர்யா, அக்ஷய்குமார் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதே போல் கிரிக்கெட் வீரர் அணியில் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், முனாப் பட்டேல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

சூர்யா அணி:

இதில் முதலில் கிரிக்கெட் வீரர்கள் அணி தான் விளையாடி 10 ஓவரில் 94 ரன்கள் குவித்திருந்தார்கள். இதை அடுத்து கிரிக்கெட் பிரபலங்கள் விளையாடும்போது அக்ஷய் குமார் தலைமையில் கில்லாடி லெவல் அணியில் நடிகர் சூர்யா விளையாடியிருந்தார். சச்சின் பவுலிங் பண்ண சூர்யா பந்தை பறக்க விட்டார். இவரை அடுத்து பிரபலங்கள் பலரும் விளையாடி இருந்தார்கள். மேலும், சூர்யா கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க அவருடைய மகன் தேவ், தியா ஆகியோர் மைதானத்திற்கு வந்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சூர்யா கிரிக்கெட் விளையாடிய வீடியோ:

இந்நிலையில் சூர்யா கிரிக்கெட் விளையாடியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வேலை ஆக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சூர்யா இதே போல தான் கிளீன் போல்ட் ஆனார். தற்போது அந்த வீடியோவை பகிர்ந்து மீண்டும் சூர்யாவை கேலி செய்து வருகின்றனர். ஆனால், அப்போது போல டக் அவுட் ஆகாமல் இந்த முறை சூர்யா கொஞ்சம் ரன்களை அடித்தார். இருந்தும் சூர்யாவை கேலி செய்து வந்தாலும் ‘அவர் ஒன்னும் ப்ரொபஷனல் வீரர் கிடையாது. சச்சின், ரைனாவுடன் ஆடியதே பெருமையான விஷயம் தான் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சூர்யா திரைப்பயணம்:

மேலும், பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, அந்த வகையில் தற்போது சூர்யா அவர்கள் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்ப பாணியில் இந்த படத்தை உருவாக்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

Advertisement