லியோ படத்தில் இடம்பெற்ற கழுகு Reference – கொண்டாடும் விஜய் ரசிகர்கள். ரஜினிக்கு பதிலடியா ?

0
430
- Advertisement -

காக்கா- கழுகு கதைக்கு பதிலீடு கொடுக்கும் வகையில் லியோ படத்தில் விஜய் பேசிருக்கும் வசனம் குறித்த மீம்ஸ் தான் தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும். தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. அனைத்து திரையரங்களிலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இன்று அனைவரும் எதிர்பார்த்த லியோ படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

லியோ படம்:

ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் படத்தில் முதல் பாதியே தூள் கிளப்புகிறது என்றும் அடுத்த பாதையெல்லாம் வேற லெவல் என்றும் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. லியோ படம் முதல் நாளில் நல்ல வசூல் சாதனையும் செய்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறிய காக்கா கழுகு கதைக்கு லியோ படத்திலேயே விஜய் பதிலடி கொடுத்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா:

சமீபத்தில் நடந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், காட்டில் பெரிய மிருகங்கள் எப்பவும் சின்ன மிருகங்களை தொல்லை செய்து கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, காகம் எப்பவும் கழுகை சீண்டிக்கொண்டே இருக்கும். ஆனால், கழுகு எப்பவும் அமைதியாக தான் இருக்கும். கழுகு பறக்கும் போது தான் அதை பார்த்து காக்கவும் உயரமா பறக்க நினைக்கும். ஆனால், காக்காவால் அது முடியாது. கழுகு தன்னுடைய இறக்கையை கூட்டி ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்துக்கு பறந்து போய்விடும். உலகின் உன்னதமான மொழி மௌனம் தான். நான் காக்கா, கழுகு என்று இவரைத்தான் சொல்கிறேன் என்று சோசியல் மீடியாவில் சொல்வார்கள்.

-விளம்பரம்-

காக்கா-கழுகு சர்ச்சை:

இங்கு குறைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயுமில்லை, இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம் வேலையை பார்த்துக் கொண்டு நேரா போய்ட்டு இருக்கணும் என்று பயங்கரமாக பேசி இருந்தார். விஜயை தாக்கி தான் ரஜினிகாந்த் சொல்கிறார் என்று இணையத்தில் கலவரம் வெடித்தது. பின் லோகேஷ் பேட்டியில், ரஜினி சார் அப்படியெல்லாம் சொல்லவில்லை. அவர் என்றும் விஜய் பற்றி தவறாக பேச மாட்டார் என்று கூறியிருந்தார்.

அதேபோல் நெல்சன், விஜய் சொல்லிதான் நான் ரஜினி சாரிடம் கதை சொல்லவே போனேன். விஜய்- ரஜினி இருவருக்கும் மத்தியில் நல்ல உறவு இருக்கிறது. ரசிகர்கள் தான் அதை தவறாக புரிந்து கொண்டு இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று கூறி இருந்தார்கள்.இருந்தாலும் ரசிகர்கள் இதையெல்லாம் கேட்டுக் கொள்ளாமல் வழக்கம்போல் ஒருவரை ஒருவரை தாக்கி விமர்சித்து கமெண்ட்ஸ் போட்டு வந்தார்கள்.

லியோ படத்தில் கழுகு காட்சி:

பின் இந்த பிரச்சனை ஒரு வழியாக முடிந்தது என்ற நிலைக்கு வரும் போது லியோ படத்தின் ஒரு காட்சியில் விஜய் அருகே கழுகு அமர்ந்திருக்கும். அதை பார்த்து விஜய், இவ்வளவு கிட்ட நான் கழுகு பார்த்ததில்லை. பார்க்க பயமாயிருக்கு என்று பேசி இருப்பார். இந்த காட்சி தேவையே இல்லாத ஒன்று என்றும் ரஜினிக்கு பதிலீடு கொடுக்கும் வகையில் தான் விஜய் இந்த காட்சியை வைத்திருக்கிறார் என்றும் விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement