‘Bloody Cheat’ – 190 ரூபாய்லாம் இல்லப்பா இது லியோ காம்போ – இப்படி டிக்கெட் வித்தா 1000 என்ன 2000 கோடி கூட வசூலிக்லாம்.

0
1187
- Advertisement -

கோவையில் விஜயின் லியோ படத்திற்கு டிக்கெட் முன்பதிவில் நடந்து இருக்கும் மோசடி தான் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது.

- Advertisement -

லியோ படம்:

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் படம் ரிலீசாக சில தினங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை லியோ படத்திற்கு இந்தியா, வெளிநாடுகளிலும் முன் பதிவு டிக்கெட் கோடி கணக்கில் விற்று இருப்பதாக கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல்:

அதிலும் USA-வில் மட்டும் இதுவரை $ 910K வசூல் செய்திருக்கிறது. மேலும், தமிழகம் முழுவதும் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கோவை திரையரங்கில் லியோ படத்திற்கு முன்பதிவு நடக்கும் மோசடி குறித்த சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை கே ஜி சினிமாஸ் திரையரங்கில் லியோ படம் வெளியிட இருப்பதால் அதற்கான டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகி இருக்கிறது. வழக்கமாக இந்த திரையரங்கில் பால்கனி டிக்கெட்டை 200 ரூபாய்க்கு விற்பார்கள்.

-விளம்பரம்-

கோவை கே ஜி சினிமாஸ் செய்த மோசடி:

இந்த முறை லியோ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் 200 ரூபாய் டிக்கெட் உடன் டீ, காபி, தின்பண்டங்கள், குளிர்பானங்கள் என அனைத்தையும் சேர்த்து காம்போ பேக் என்று 450 ரூபாயை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இதை ரசிகர்களும் ஆர்வமாக வாங்கி இருக்கிறார்கள். இதுவரை நான்கு நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு திரையரங்களில் டிக்கெட் கட்டணங்களை அதிகப்படுத்த கூடாது.

அதிருப்தியில் ரசிகர்கள்:

அதேபோல சரியான பார்க் வசதி, திரையரங்கில் சுகாதார சூழ்நிலை இருக்க வேண்டும் என்று அறிவிப்பை வெளிப்பட்டிருந்தது. இதனை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் இது குறித்து திரையரங்கில் ஆய்வு செய்து இருக்கிறார். அப்போது தான் கோவை கே ஜி சினிமாஸ் திரையரங்கில் காம்போ பேக் என்று ஒரு டிக்கெட் 450 ரூபாய் விற்றிருப்பது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மதியில் பேரதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement