சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி நாயகியாக நடித்துள்ள ‘லைசன்ஸ்’ – முழு விமர்சனம் இதோ.

0
1470
- Advertisement -

அறிமுக இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லைசன்ஸ். இந்த படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜே ஆர் ஜி புரடெக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

நாட்டில் நடக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இயக்குனர் கதைகளை கொடுத்திருக்கிறார். படத்தில் சின்ன வயதில் இருந்தே துணிச்சலாக நடிப்பை தட்டிக் கேட்கும் பெண்ணாக பாரதி இருக்கிறார். குறிப்பாக, இவர் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். தப்பை தட்டி கேட்டு தண்டிக்கும் பணியை விட தவறே செய்யாத இளம் சமுதாயத்தை உருவாக்கும் பணி ஆசிரியர் என்பதை தன்னுடைய தந்தையின் மூலம் உணர்ந்து ஆசிரியராக மாறுகிறார் பாரதி.

- Advertisement -

அதனுடன் இவர் சமூகப் பணிகளையும் தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகிறார். ஒரு கட்டத்தில் பாரதி பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் பாலியல் கொடுமைக்கு தள்ளப்படுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பாரதி அந்த குற்றவாளியை தண்டிக்க முயற்சிக்கிறார். ஆனால், சட்டம் அவர்களை தண்டிக்கவில்லை. இதனால் பொங்கி எழுந்த பாரதி, 18 வயது நிரம்பிய பெண்களை பாதுகாக்க அவர்களுக்கு துப்பாக்கி கொடுக்க வேண்டும் என்று பொதுநல மனுவை போடுகிறார்.

பின் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார். இறுதியில் பாரதி போட்ட மனு என்ன ஆனது? அந்த சிறுமிக்கு நியாயம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. இயக்குனர் சொல்ல நினைத்த கருத்தை முதல் படத்திலேயே நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். குறிப்பாக சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார். மேலும், குறைந்த பட்சத்தில் அனுபவம் இல்லாத புதிய நடிகர் நடிகைகளை வைத்து ஒரு நல்ல படத்தை இயக்குனர் கொடுத்திருப்பதற்கே ஒரு தனி பாராட்டு தரவேண்டும்.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ராஜலட்சுமி இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்து இருக்கிறார். பாட மட்டுமில்லாமல் தன்னால் நடிக்கவும் முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். இந்த படத்தில் அவர் பாரதி என்ற பெண்ணின் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம். இவரை அடுத்து நடிகர் ராதாரவி தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்களை தொடர்ந்து படத்தில் நடித்திருக்கும் கருப்பையா, நடராஜன், ஜீவானந்தம், விஜய் பாரத், ஜீவா ரவி, தான்யா போன்ற பல நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பின்னணி இசை ஓகே. ஆனால், பாடல்கள் கவரவில்லை. பாலியல் தொல்லையால் ஒவ்வொருவரும் படும் மன வேதனையும் குமுரலையும் இந்த படத்தில் இயக்குனர் காட்டி இருக்கிறார். பெண்களுக்கு நடக்கும் கொடுமையும், அதை எதிர்கொள்ளும் விதத்தையும் சிறப்பாக காண்பித்திருக்கிறார். அதேசமயம் ஆண் குழந்தைகளையும் சரியாக வளர்க்க வேண்டும் என்பதை கூறியிருக்கிறார். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு லைசென்ஸ் ஒரு நல்ல கதைக்களமாக அமைந்திருக்கிறது.

நிறை:

இயக்குனர் கதையைக் கொண்டு சென்ற நேர்த்தி சிறப்பு

ராஜலட்சுமி, ராதாரவி நடிப்பு

பின்னணி இசை ஓகே

கதைக்களம் அருமை

சமூகத்திற்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

புதுமுக நடிகர்களை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

சில இடங்களில் அழுத்தமற்ற வசனங்கள்

பாடல்கள் ஒர்க் அவுட் ஆகவில்லை

மொத்தத்தில் லைசென்ஸ்- பாராட்டு

Advertisement