LCUவா ? விஜய் Double Actionஆ? – பல கேள்விக்கு விடை – லியோ படத்தின் முழு விமர்சனம் இதோ.

0
1229
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ படம் உலகம் முழுதும் இன்று வெளியாகி இருக்கிறது. கைதி,மாஸ்டர்,விக்ரம் என்று தொடர்ச்சியாக மூன்று பிளாக்பாஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது மீண்டும் விஜயை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கி இருக்கிறார். விஜய்,திரிஷா,அர்ஜுன், சஞ்சய் தத்,கெளதம் மேனன்,பிரியா ஆனந்த்,மிஸ்கின் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். பல எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-

படத்தின் கதை :

லோகேஷ் கனகராஜ் சொன்னது போல லியோ படத்தின் கதை ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாக உருவாகி இருக்கிறது. பார்த்திபன் (விஜய்) தனது மனைவி சத்யா (த்ரிஷா) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஹிமாச்சல பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கே ஒரு சிறிய காபி கடை வைத்து நடத்தி வரும் அவர் அதன் மூலம் வரும் வருமானத்தில் தனது வாழ்க்கையை தனது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

இருப்பினும், அவரது மகிழ்ச்சி நீண்ட காலம்நீடிக்கவில்லை. எதிர்பாராத விதமாக பார்த்திபனுக்கு(விஜய்க்கு) சிலருடன் சண்டை ஏற்படுகிறது . இதனால் பார்த்திபன்(விஜய்) இமாச்சல பிரதேசம் முழுவதும்பிரபலமாகிறார். அதன் பிறகு ஆண்டனி தாஸ் (சஞ்சய் தத்) மற்றும் ஹரோல்ட் தாஸ் (அர்ஜுன்) பார்த்திபனை கவனிக்கிறார்கள். பார்த்திபனின் செயல்கள் பழைய எதிரியான லியோ தாஸை நினைவுபடுத்துகின்றன.

இப்படிப்பட்ட நிலையில் பார்த்திபன் யார், லியோ தாஸுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகிறது. பார்த்திபன் மற்றும் அவரது குடும்பத்தை ஆண்டனி ஏன் தேடி வருகிறார்? பார்த்திபன் இந்த அனைத்து சிரமங்களையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறுகிறாரா ? அல்லது அவரது மகிழ்ச்சியான குடும்பம் ஒரு நொடியில் பிரிந்துவிடுகிறதா? இந்த முழுமையற்ற கேள்விகளுக்கான பதில்களுடன்படம் நகர்கிறது.

-விளம்பரம்-

நிறைகள் :

படம் ஒரு ஆக்ஷன் படமாக நிரம்பி வழிந்து இருக்கிறது. விஜயின் ஆக்ஷன் படத்தில் தெறிக்கவிட்டு இருக்கிறது.

படத்தில் அவரவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக செய்து இருக்கிறார்கள். திரிஷா,பிரியா ஆனந்த்,கெளதம் மேனன் ஆகியோர் நன்றாக நடித்துள்ளார்கள்.

அதிலும் படத்தில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் மிரட்டி இருக்கிறார்கள், குறிப்பாக சாண்டியின் நடிப்பை நிச்சயம் ரசிப்பீர்கள்

விறுவிறுப்பான முதல் பாதி

படத்தின் சண்டை காட்சிகள், விஷ்வல்ஸ், இசை மற்றும் பின்னணி ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

படத்தின் VFX லோகேஷ் சொன்னது போல தரமாக அமைந்து இருக்கிறது.குறிப்பாக முதல் 10 நிமிடம் தீயாக இருந்தது

வாரிசு,பீஸ்ட் படங்களில் மிஸ் செய்த விஜய்யின் என்ட்ரி பாடல் கொண்டாட்டம் இரண்டாம் பாதியில் வரும் நான் ரெடி பாடலால் இந்த படத்தில் மிஸ் ஆகவில்லை

படத்தில் நீங்கள் எதிர்பாராத மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரின் cameo இருக்கிறது.

குறைகள் :

படத்தின் செண்டிமெண்ட் காட்சிகள் அந்த அளவிற்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை.

படத்தில் அத்தனை வில்லன்கள் இருந்தாலும் யாருடைய கதாபாத்திரமும் வெய்ட்டாக இல்லை (ரோலக்ஸ்,ரோலக்ஸ் தான் )

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றதால் படத்தின் இரண்டாம் பாதி படு மெதுவாக நகர்கிறது.

படத்தின் நீளம் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் தான், அதிலும் இரண்டாம் பாதி உங்கள் பொறுமையை சோதிக்கும்

படத்தில் நீங்கள் எதிர்பார்த்து செல்லும் LCU கனக்ட் உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும், படம் பார்த்தால் உங்களுக்கு புரியும்

படம் முழுதும் சண்டை,சண்டை,சண்டை என்பதால் ஒரு கட்டத்தில் அதுவே சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது

மேலும், படத்தில் Goosebumps சீன்களும் திருப்பதிப்படுத்தவில்லை.

இறுதி அலசல் :

லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களான விக்ரம் கைதி போன்ற படங்கள் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து LCU என்ற பெயர் உருவானது. எனவே இந்த படம் LCU இருக்குமா இல்லையா என்ற மிகப்பெரிய கேள்வி உருவானது. இதனாலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இருப்பினும் விஜய்யின் முந்தைய படமான பீஸ்ட்,வாரிசு ஆகிய படங்களை ஒப்பிடும் போது இந்த படம் பரவாயில்லை. மொத்தத்தில் லியோவில் விஜய் சிங்கம் தான் என்றாலும் கர்ஜனை குறைவு தான்.

Advertisement