இயக்குனர் சொல்லியும் டாப் தமிழ் நடிகையுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்துள்ள விஜய் சேதுபதி.

0
519
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. அதோடு இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய்சேதுபதி. ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் தற்போது முன்னணி நடிகராக மிரட்டி கொண்டு வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Kaathuvaakula Rendu Kaadhal Review | காத்துவ வாக்குல 2 காதல்

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில்நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நேற்று வெளியாகி இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

- Advertisement -

விஜய் சேதுபதியின் 96 படம்:

மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் விளம்பரத்திற்காக விஜய் சேதுபதி அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் 96 படம் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் தான் 96. இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்குகோவிந்தன் இசை அமைத்திருந்தார். பள்ளி பருவ காதல் முதல் கல்லூரி பருவ காதல் வரை என்று இருவரின் காதலை அழகாக காண்பித்திருக்கிறார்கள்.

96-movie
96-movie

விஜய் சேதுபதி அளித்த பேட்டி:

படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதோடு இன்றும் ரசிகர்கள் மத்தியில் 96படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி அவர்கள் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் விளம்பரத்திற்காக பேட்டியளித்திருந்தார். அதில் அவரிடம் திரைப்பட அனுபவம் குறித்து பல கேள்விகள் கேட்க்கப்பட்டது. விஜய் சேதுபதியும் அழகாக பதில் அளித்து இருக்கிறார். அப்போது விஜய் சேதுபதி அவர்கள் 96 படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

-விளம்பரம்-
Vijay Sethupathi's 96 movie 1st day chennai city box office report

96 படத்தில் முத்த காட்சி:

நானும், திரிஷாவும் நடித்த 96 படத்தின் கிளைமாக்ஸில் ஒரு முத்தக் காட்சி இருக்கும். இயக்குனர் அது பண்ணலாம் என்று சொன்னார். அனால், நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால் பாக்குற ஆடியன்சுக்கு அது தப்பாக போய் விடும். ராம்-ஜானு என்ற இரண்டு அழகான கதாபாத்திரம் வீணாகிவிடும் மாதிரி தோன்றியது. அது அப்படியே எதார்த்தமாக போகட்டும், முத்தக்காட்சி வைத்து அதை கெடுத்து விட வேண்டாம் என்று சொன்னேன்.

Watch the video below :9.43mins

ராம்-ஜானு குறித்து விஜய் சேதுபதி சொன்னது:

அதுமட்டும் இல்லமால் படத்தில் ராம், ஜானுவை தொட கூட மாட்டேன். பின் ஜானுவுக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும் போது எப்படி? இது எதார்த்தமான இருவருடைய பயணம் என்று சொன்னேன். அதனால் அந்த காட்சியை வைக்கவில்லை. இப்படியே தான் எல்லா படத்திலும் நான் எதார்த்தத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முயற்சிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி விஜய் சேதுபதி அளித்திருந்த பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement