அலைபாயுதே படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது இந்த நடிகர் தான் – இவர் ஒரு கிரிக்கெடரும் கூட! யார் தெரியுமா ?

0
703
karthi
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை நடிப்பையும் தாண்டி பலருக்கும் பல திறமைகள் இருக்கிறது. அதே போல கிரிக்கெட்டும் சினிமாவும் என்றும் பிரிக்க முடியாத ஒரு விசயயமாகவே தான் இருந்து வருகிறது. சடகோபன் ரமேஷ் துவங்கி ஹர்பஜன் சிங் வரை பல கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிகராக நடித்து இருக்கின்றனர். அதே போல சச்சின் முதல் தோனி வரை பல இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாகவும் வந்து இருக்கிறது. சரி, இதை எல்லாம் ஏன் இப்போ சொல்ற என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகர்களுக்கு கிரிக்கெட் மீது மிகுந்த ஆரவம் உண்டு. அதனாலேயே அவ்வப்போது நட்சத்திர கிரிக்கெட் என்று கூட அடிக்கடி நடத்தப்படுகிறது. இதில் விஷ்ணு விஷால் போன்றவர்கள் உண்மையிலேயே ப்ரொபஷனல் கிரிக்கெட்டர்ஸ். அந்த வகையில் புகைப்படத்தில் இருக்கும் இந்த தனுஷ் பட நடிகரும் ஒரு ப்ரொபஷனல் கிரிக்கெட்டர் தான் என்பது பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

- Advertisement -

அலைபாயுதே வாய்ப்பு :

அட, அது வேறு யாரும் இல்லை மேடை கலைஞரும் மற்றும் நடிகருமான கார்த்திக் குமார் தான். 1993 ஆம் தமிழ்நாடு அண்டர் 16 அணியில் விளையாடி இருக்கிறார். இவர் மாதவன் நடிப்பில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தில் துணை நடிகராக நடித்து தான் சினிமாவில் அறிமுகமானார். சொல்லப்போனால் அலைபாயுதே படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு இவர் தான் ஆடிஷனில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.. ஆனால், இவர் மிகவும் இளமையாக இருந்ததாலும் நடிப்பில் அனுபவம் இல்லாததாலும் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

கார்த்திக் நடித்த படங்கள் :

அலைபாயுதே படத்திற்கு பின் இவர் வானம் வசப்படுமே என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அதன் பின்னர் மணிரத்னம் இயக்கிய பல இந்தி படங்களில் நடித்த இவர் கண்ட நாள் முதல் படத்தில் இரண்டாம் ஹீரோவாக நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது தனுஷ் நடிப்பில் வெளியான ‘யாரடி நீ மோகினி’ திரைப்படம் மூலம் தான்.

-விளம்பரம்-

ஸ்டான்ட் அப் காமெடியன் :

இந்த படத்திற்கு பின் இவர் பல படங்களில் நடித்து இருந்தார். அழகும் திறமையும் இருந்தும் இவரால் ஒரு முன்னணி ஹீரோவாக வர முடியவில்லை. இறுதியாக இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘மன்னர் வகைரா’ படத்தில் நடித்து இருந்தார். மேலும், நடிப்பு மட்டுமின்றி ஸ்டாண்ட் அப் காமிடியனும் கூட. இவரது ஸ்டாண்ட் அப் காமெடிக்கு என்றே பல ரசிகர் கூட்டமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண வாழ்க்கை :

அதே போல சினிமாவிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே பின்னணி பாடகி சுச்சியை திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் இருவரும் பிரிந்துவிட்டனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இளம் நடிகை அமிர்தா சீனிவாசன் என்பவரை கார்த்திக் குமார் திருமணம் செய்திருக்கிறார். மேயாத மான், தேவ் போன்ற படங்களின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் நடிகை படங்களின் சீனிவாசன்.

Advertisement