மெர்சலை போலவே பிரச்சினைகளில் சிக்கிய விஜய்யின் 7 படங்கள் !

0
2449
Vijay
- Advertisement -

“நம்மல ஈசியாலாம் வாழ விட்ர மாட்டாங்க, வேற வழி இல்லை, அதெல்லாம் தாண்டி தான் வந்தாகனும்” தளபதி விஜய் இந்த வரியை அனுபவித்து எழுதியிருக்கிறார் என்பது மட்டும் நிதர்சனம். அவரைக் கண்டு ஏன் அரசியல் கட்சிகள் இவ்வளவு அஞ்சுகின்றன என தற்போது வரை பலருக்கும் புரியாமல் தான் இருக்கும். ஆனால், அவர் கடந்து வந்த பாதை கரடடு முரடானது, போராட்டக்குனம் மிக்க விஜய் தற்போது வரை ஆடுத்தடுத்த படங்களில் என்னென்ன தடைகளைத் தாண்டி வந்திருக்கிறார் என்பதை கீழே தொகுத்துள்ளோம்.
mersal
1.காவலன் (2011)

-விளம்பரம்-

இந்த கலைஞனைக் கண்டு பயம் துவங்கியது 2011ல் வந்த காவலன் படத்திலி இருந்து ஆரம்பமாகிறது. இது ‘சுறா’ பட தோல்வியினால் வந்த வினியோகஸ்தர்கள் ஏற்ப்படுத்திய பிரச்சனையாக இருந்தாலும், இதுவும் அவரது வளர்ச்சியின் தடைகளாக அப்போது பார்க்கப்பட்டது. சுறா படத்தின் நஷ்டத்தை வழங்கினால் ஒழிய காவலன் படத்திய வெளியிடுவோம் என போர்க்கொடி தூக்கினர் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு. பின்னர் அதற்க்கான நஷ்டத்தை ஈடு செய்வதாக கூறிய பின்னர் படத்தை வெளியிட்டனர். இதற்க்கு முன்னர் இரு முறை படத்தில் ரிலீச் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்த்ககது.
Vijay
2.துப்பாக்கி (2012)

- Advertisement -

படத்தின் போஸ்டரில் இருந்து பிரச்சனை ஆரம்பமானது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் ஸ்டைலாக சுருட்டு பிடிப்பது போல் வெளியானது. உடண்டியாக ஒரு சமூக சீர்த்திருத்த கும்பல் இவரால் தான் சமூகம் அழிவது போல் போர்க்கொடியைத் தூக்கியது. இது சிறிய பிரச்சனை தான். படம் எந்த பிரச்சனை இல்லாமல் வெளியானது. படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியிருப்பதாக வரிந்து கட்டிக்கொண்டு வர தமிழக அரசு புகுந்து பிரச்சனையை தீர்த்து வைப்பது போல் படத்தில் சில காட்சிகளை ‘கட்’ செய்து பின்னர் படத்தை வெளியிட்டது. இதனை வைத்து தான் தற்போது மெர்சல் படத்தில் உள்ள காட்சிகளை ரீ சென்சார் செய்யாமல் கட் செய்ய வலியுருத்தி வருகிறது ஒரு கும்பல்.

3.தலைவா (2013)

-விளம்பரம்-

தற்போது வரை விஜய் சந்தித்த ஒரு பெரிய பிரச்சனை மற்றும் பொருளாதார ரீதியில் நஷ்டத்தை ஏற்ப்படுத்திய பிரச்சனை. படத்தின் பெயரில் இருந்து ஆரம்பம் ஆனது. அப்போதைய ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சிக்கு அந்த ‘தலைவா’ என்ற தலைப்பில் இருந்து பிடிக்கவில்லை. அதற்கேற்றார் போல் தலைவாவின் கீழ் TIME TO LEAD என்ற ஸ்லொகனுடன் வந்தது ஃபர்ஸ்ட் லுக். மேலும், கையை உயர்த்தி நானிருக்கிறேன் என்ர கெஸ்சரும் விஜய் அரசியலுக்குத் வரப் போகிறார் பயந்து அந்த TIME TO LEAD ஸ்லோகனை நீக்க வலுக்கட்டாயப்படுத்தியது அப்போதைய தமிழக் அரசு. பின்னர் அந்த ஸ்லொகனை நீக்கிய பின் ஒரு வாரம் கழித்து வெளிவந்தது தலைவா படம். அதற்கு முன்னரே கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வெளியாக, அதனால் பெரும் சந்தை தமிழகத்தில் வீழ்ச்சியை சந்தித்தது. இப்பட்த்திற்க்காக விஜய் தமிழக அரசிற்க்கு நன்றி கூறிய அந்த காணொளித் துணுக்கை எந்த ஒரு தளபதி ரசிகனும் மறக்க மாட்டான்.

4.கத்தி (2014)

படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனம் இலங்கை இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவின் உறவினருடையது இதனால் அவர்களுக்கு வர்த்தகம் செய்ய இங்கு இடமில்லை என தமிழக வாழ்வுரிமை கட்சியி வேல்முருகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சத்யம் திரையரங்கில் கல் வீசப்பட்டது. பின்னர் படத்தயாரிப்பு நிறுவனம் தன் நிலையை எடுத்துக் கூறவே பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.
Vijay
5.புலி (2015) விஜயின் மேளாலரான பி.டி.செல்வகுமார் இப்படத்தை தயாரித்திருந்தார். ஆனால், படம் வெளியாகும் முன்தினம் படத்தில் சம்மந்தப்பட்ட நபர்களின் வீட்டில் ஐ.டி ரெய்டு நடந்தது. மேலும், பைனான்சியர்களுக்கு இடையேனான பிரச்சனை காரணமாக …

6.தெறி(2016)

வினியோகஸ்தர்களுக்கு இடையே ஏற்ப்பட்ட பிரச்சனை காரணமாக செங்கல்பட்டு டிவிசனில் வெளியாகவில்லை. இருந்தும் படம் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்தது.
vijay
7.மெர்சல்(2017)

படம் வெளியாக ஒரு நாள் இருக்கும் வரை பிரச்சனை இருந்து கொண்டே தான் இருந்தது. மாறி படத்திற்கு வராத புறா சர்ச்சை மெர்சல் படத்தில் அந்த ஒரு சில நொடி மேஜிக் காட்சிக்கு வந்தது. பிரச்சனை முடிந்து ஒரு நாள் முன்னர் தணிக்கை செய்யப்பட்டு மெர்சலாக வெளிவந்தது மெர்சல். பின்னர் வந்து ஆட்டத்தில் கலந்து கொண்டது பா.ஜ.க. ஆனால், சேம் சைடு கோல் போட்டு தேசிய அளவில் படத்திற்கு ப்ரொமொசன் செய்தது தான் மிச்சம்.

Advertisement