லியோ படத்திற்கு வரும் கலவையான விமர்சனம் குறித்து முதன் முறையாக மனம் திறந்த லோகேஷ் – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
355
- Advertisement -

லியோ படத்தின் வசூல் குறித்த விமர்சனத்திற்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படத்தின் வசூல் குறித்த சர்ச்சை தான் வைரலாகி வருகிறது. லியோ படம் தொடர்பாக தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், லியோ படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலிக்கும் என்று கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. ரஜினிகாந்த் லியோ படத்தை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டி இருந்தார்.

-விளம்பரம்-

லோகேஷ் கலகராஜ் அடுத்ததாக தலைவருடைய 171 வது படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்திலும் நான் தான் தயாரிப்பாளராக இருந்தேன். மாஸ்டர் படம் வெற்றி அடைந்தபோது விஜய் இடம் உங்களுக்கு ஏதேனும் பரிசு கொடுக்க நினைக்கிறேன் என்று கேட்டேன். அதற்கு விஜய், அதெல்லாம் எதற்கு? எனக்கு நீங்கள் சம்பளம் கொடுத்து விட்டீர்கள், அதுவே போதும் என்று சொன்னதாக கூறி இருக்கிறார். மேலும், படத்தின் கதையை முதலில் விஜய் தான் தேர்ந்தெடுத்தார். பின்னர் நான் அதில் சில மாற்றங்களை செய்யசொன்னேன்.

- Advertisement -

விஜய் படங்கள்:

சமீப காலமாக விஜய் திரைப்படங்கள் தோல்வியடைய காரணம் விஜய் படத்தின் கதையில் தலையிடுவது தான் என்ற ஒரு பேச்சுக்களும் நிலவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் நிலவி முன்னர் இயக்கிய மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்களுமே பெருமளவு வெற்றி பெற்றதற்கு காரணம் இயக்குனர் சுதந்திரம் தான். ஆனால், கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் 50% விஜய் திரைப்படமாகவும் 50% லோகேஷ் கனகராஜ் திரைப்படமாகவும் தான் அமைந்திருந்தது.
இதனாலையே மாஸ்டர் திரைப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தவில்லை.

லோகேஷ்-விஜய் கூட்டணி:

சொல்லப்போனால் இந்த படம் ஓடியதற்கு விஜய் சேதுபதி தான் முக்கிய காரணம் என்ற பேச்சுவார்த்தை அடிபட்டது. இப்படி ஒரு நிலையில் தான் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் மீண்டும் கூட்டணி அமைத்தார்கள். மேலும், மாஸ்டர் படத்தின் போது 50 சதவீதம் என்னுடைய படமாகவும் 50 சதவீதம் விஜயின் படமாகவும் இருந்தது என்பதால் அடுத்த படம் 100% என்னுடைய படமாக தான் இருக்க வேண்டும் என்று விஜய்யிடம் கூறியதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனால் மாநகரம் கைதி போன்ற படங்களைப் போல லியோ திரைப்படமும் 100% லோகேஷ் கனகராஜ் திரைப்படமாக இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

லியோ வசூல் குறித்த சர்ச்சை:

ஆனால், படம் பார்த்த பெரும்பாலான பேர் இந்த படம் 100% லோகேஷ் கனகராஜ் படம் இல்லை என்று தான் கூறி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என்றும் அவரது உதவியாளரான ரத்தினகுமார் தான் இரண்டாம் பாதியை இயக்கினார் என்று இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம், லியோ படம் 500 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இது உண்மையிலேயே வசூல் செய்யப்பட்டதா? என்று தெரியவில்லை. அவரிடம் போய் யாராவது கணக்கா கேட்கப் போகிறார்கள்? தமிழகத்தில் 60 முதல் 70 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்த்திருக்கிறார்கள் என்று திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்புரமணியம் கூறி இருந்தார்

லோகேஷ் கொடுத்த பதில்:

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வசூல் குறித்த கேள்விக்கு கூறி இருப்பது, படத்தின் கலெக்ஷனுக்கும் எனக்கு சம்பந்தமில்லை. இதை தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும். முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி கொஞ்சம் லேக் என்று கலவை விமர்சனம் வந்திருக்கிறது. அதை வேண்டுமானால் நான் சரி பண்ணலாம். மற்றபடி படத்தின் கலெக்ஷனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. இதை நீங்கள் தயாரிப்பாளரிடம் தான் கேட்கணும் என்று சிரித்துக் கொண்டே கூடியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement