என்னை நோக்கி பாயும் சேட்டா’னு பண்ணா நல்லா இருக்கும்- லொள்ளு சபா 2 குறித்து பேசிய லொள்ளு சபா நடிகர்.

0
1298
lollusabha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது சூப்பர்ஸ்டார் முதல் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பாரபட்சம் பார்க்காமல் பாடங்களை தாறுமாறாக கிண்டல் செய்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்தார்கள் மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு நடிகர் நடிகர்கள் தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார்கள் சந்தானம் சுவாமிநாதன் பாஸ்கர் என்று பல்வேறு நடிகர்கள் லொள்ளு சபா நிகழ்ச்சியில் இருந்து வந்தவர்கள்தான்.

-விளம்பரம்-
‘Lollu Sabha

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்றும், பல முன்னெச்சரிக்கைகள் உடன் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள் இருப்பதால் தவித்து வருகின்றனர்.வீட்டில் இருப்பதால் போர் அடிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு சேனலும் சீரியல்,நிகழ்ச்சிகள் என மீண்டும் தூசு தட்டி மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : கேம் ஓவர், தி எண்ட் – முரட்டு சிங்கள் பிரேம்ஜி பகிர்ந்த திருமண வீடியோ.

- Advertisement -

அந்த வகையில் இந்த சமயத்தில் லொள்ளு சபா நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்புங்கள் என்று ரசிகர்கள் பலரும் கேட்டுக்கொண்டு வந்த நிலையில், விஜய் டி.வி-யில் காலை 7.30 – 9 மணி வரை ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. ஏப்ரல் 15 முதல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.இந்த நிலையில் பிரபல பத்திரிகை ஒன்றிற்க்கு லொள்ளு சபா ஜீவா பேட்டி கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் பல்வேறு ஸ்வாரசிம்மான தகவல்களை பகிர்ந்துள்ளார் ஜீவா. . 90ஸ் கிட்ஸ்ஸுக்கு மட்டுமில்ல, இப்ப இருக்கிற 2K கிட்ஸுக்கும் `லொள்ளு சபா’ பிடிச்சிருக்கு. தொலைக்காட்சில அப்ப ஹிட்டான சீரியல்கள் நிறைய இப்ப திரும்பவும் போட்டுட்டு இருக்காங்க. விஜய் டி.வியே எங்க கிட்ட மறுபடியும் `லொள்ளு சபா’ கொண்டு வரச் சொல்லி கேட்டாங்க என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்டு திருநங்கைகள் போராட்டம். காரணம் என்ன தெரியுமா?

-விளம்பரம்-

மேலும், லொள்ளு சபா 2 வந்தால் தற்போது இப்ப வந்திருக்க எந்தப் படங்களை நிகழ்ச்சிக்குள்ள எடுத்துட்டுவருவீங்க என்று கேள்வி கேட்கப்பட்டிருந்ததர்க்கு தலைவர் படம் `தர்பார்’ல இருந்தே ஆரம்பிக்கலாமே. ‘விஸ்வாசம்’, ‘காலா’ பண்ணலாம். `என்னை நோக்கி பாயும் சேட்டா’னு கேரளால இருந்து ஒரு சேட்டா கிளம்பி வர்றார்னு ஒரு ஃப்ளோல பண்ணா பயங்கரமா இருக்கும். அவ்வளவு ஏன் கொரோனாவை வெச்சுகூட பண்ணலாம் என்று கூறியுள்ளார்.

Advertisement