நேற்று வரை தினமும் காலை 6மணிக்கு பாபா படம் வந்தது, இனி வராது – ஆர்.எஸ் சிவாஜி குறித்து லொள்ளு சபா சேஷு உருக்கம்.

0
2079
seshu
- Advertisement -

சமீபத்தில் மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி குறித்து லொள்ளு சபா சேஷு பதிவிட்டு இருக்கும் உருக்கமான விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் ஆர் எஸ் சிவாஜி. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இணை இயக்குனர், ஒலி வடிவமைப்பாளர், லைன் ப்ரொடியூசர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர் அதிகம் தமிழ் மொழி படங்களில் தான் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

குறிப்பாக, கமலஹாசன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட படங்களில் இவர் அதிகம் நடித்திருக்கிறார். மேலும், இவர் அதிகம் நகைச்சுவை இடங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு இவர் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்திருந்த கார்க்கி படத்திலும் நடித்திருந்தார். இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஆர்.எஸ்.சிவாஜி நடித்த படங்கள்:

இவர் அபூர்வ சகோதரர்கள், மாப்பிள்ளை, குணா, மகளிர் மட்டும், பூவே உனக்காக, லிட்டில் ஜான், வில்லன், அன்பே சிவம், ஆய்த எழுத்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, குஸ்தி, உன்னை போல் ஒருவன், கணிதன், எட்டு தோட்டாக்கள், வனமகன், கோலமாவு கோகிலா, தாராள பிரபு, சூரரைப் போற்று போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் இவர் இன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் காலமானார். இவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் லொள்ளு சபா சேஷு உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘ நேற்று வரை தினமும் காலை 6மணிக்கு ஓம் ஸ்ரீ சாய்ராம் என ஒரு பாபா படம் வந்தது நானும் ஓம் ஸ்ரீ சாய்ராம் good mrng anna என் அனுப்புவேன். பல நேரம் நான் 5.30க்கு அனுப்புவேன் அவரும் எனக்கு ரிப்ளை செய்யாமல் இருந்ததில்லை இன்று காலை அனுப்பினேன் பதில் இல்லை இனியும் இருக்காது அண்ணா உங்களின் ஆத்மா சாந்தியடைய பாபாவை வேண்டுகிறேன் Om sri Sairam rip anna கண்ணீர் அஞ்சலி… கடைசீயில் அண்ணா அனுப்பிய சாய்ராம் படம்’ என்று அவர் அனுப்பிய புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆர் எஸ் சிவாஜி இவர் கமலின் பெரும்பாலான படங்களில் நடித்து இருப்பார். அதற்கு முக்கிய காரணமே சந்தான பாரதி தான். ஆம், பிரபல நடிகர் சந்தான பாரதி இவரது உடன் பிறந்த தம்பி ஆவார். சந்தான பாரதி, கமலின் மிகவும் நெருங்கிய நண்பர். கமலின் பல படங்களில் நடித்து இருக்கார். அந்த வகையில் மைக்கேல் மதன காமராஜன் முதல் பம்மல் கே சம்மந்தம் வரை சந்தானமும் ஆர் எஸ் சிவாஜியும் ஒன்றாக பல படங்களில் நடித்துள்ளனர்.

ஆர்.எஸ்.சிவாஜியின் கடைசி படம் :

மேலும் இவர்களது தந்தையும் ஒரு சினிமா பிரபலம் தான். இவரது தந்தை எம் ஆர் சந்தானம் ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். சிவாஜி நடிப்பில் வெளியாகி இன்று வரை அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு உதாரணமாக இருக்கும் ‘பாசமலர்’ படத்தின் தயாரிப்பாளரும் இவர்களது தந்தை தான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஆர் எஸ் சிவாஜி கடைசியாக இவர் நடித்திருந்த படம் லக்கி மேன். இந்த படம் நேற்று தான் வெளியாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement