ஆஃபீஸ் பாய், அசிஸ்டன்ட்,பசியோடு பீச்சில் இருந்த போது சாப்பாடு வாங்கி கொடுத்த நபர் – மாரிசெல்வராஜ் உருக்கம்.

0
1055
mariselvaraj
- Advertisement -

ஆனந்த விகடன் இதழின் சார்பில் “சொல்வழிப் பயணம்” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது மேடையில் மாரி செல்வராஜ், ஒரு படைப்பில் என்ன அரசியல் பேசப்பட்டிருந்தாலும் அது சரியா? தவறா? என்ற முடிவினை மக்கள் முடிவு செய்யட்டும் என்று பவா சொல்வார்.

-விளம்பரம்-

இப்போது இங்கே தனி மனித சக்தி அதிகரித்து இருக்கிறது. நீ சொல்லி நான் என்ன கேட்கிறது? என்கிற நிலைதான் தற்போது உருவாகி இருக்கிறது. மொபைல் வைத்திருக்கும் அனைவரும் இலக்கியத்தைக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இலக்கிய வாசனையே இல்லாத தாசில்தாராக இருக்கும் என்னுடைய அண்ணனுக்கும் இலக்கியம் தெரிந்திருக்கிறது. அவன் பவாவின் வீடியோக்களை யூடியூபில் பார்த்து ஒவ்வொரு எழுத்தாளர்களின் பெயர்களை என்னிடம் சொல்லி இவரை படித்திருக்கிறாயா? என்று கேட்கிறான்.

- Advertisement -

இலக்கியத்தை மிக தாமதமாகத் தான் வாசிக்க ஆரம்பித்தான். இன்று சினிமா என்னவா இருக்குது என்று பார்க்க இப்போது இருக்கும் இளம் படைப்பாளிகளை தான் முதலில் வாசிக்க ஆரம்பித்தேன். முக்கியமான மனிதர்களாக இருப்பவர்களின் மீது நமக்கு மரியாதை உடனே வந்துவிடும். அப்படித்தான் ஒருமுறை நான் சிறுகதைகளை எழுதி ராம் சாரிடம் கொடுத்தேன். அவர் இதை புத்தகமாக வெளியிடலாம் என்று சொன்னார். எப்படி சார்? என்னுடைய எழுத்துக்களை அதற்குள் புத்தகம் போடுவார்களா? என்று கேட்டபோது திருவண்ணாமலையில் பவாவை நேரில் சந்திக்க என்னை அனுப்பி வைத்திருந்தார்.

அங்கு போனால் தான் ஒட்டுமொத்த தமிழ் இலக்கியமும் இருக்கிறது. என்னுடைய எழுத்துக்களை பார்த்தால் அதில் எமோஷன் தான் அதிகமாக இருக்கிறது. பின் அதை படித்த பவா புத்தகமாக மாற்றினார். தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் புத்தமாக மாறியது. ஜெயமோகன் போன்ற பெரிய எழுத்தாளர்களையும் அப்போதுதான் நான் நேரில் பார்த்தேன். என்னை எழுத்தாளராக மாற்றியதில் வம்சிக்கும் பவாக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அடுத்து மறக்கவே நினைக்கிறேன் புத்தகம் வெளிவந்தது.

-விளம்பரம்-

எழுத்தாளனுக்கு இருக்கும் சுதந்திரம் சினிமாவில் இல்லை. நான் இந்த விழாவிற்கு வரும் போது நான் ஏன் திரும்ப எழுத கூடாது என்று தோன்றியது. வாசிப்பும் எழுத்தும் தான் என்னை மாற்றியது. மாமன்னன் திரைப்படத்தில் கூட ஒரு விமர்சனத்தில் அய்யா வழி மனிதர் எதுக்கு அந்த சிறுவனுக்கு உதவுவது போல கதைக்கு சம்பந்தம் இல்லாமல் வருகிறார் என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால், சென்னை மெரினா பீச்சில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் படுத்து கிடந்த போது எனக்கு உணவு வாங்கித் தந்தது அப்படிப்பட்ட வெள்ளை நாபம் இட்ட நபர் தான்.

அவர் எனக்கு நிறைய விஷயங்களை வழிகாட்டி இருக்கிறார். என் வாழ்வில் இருந்தும் மறைந்து விட்டார். அந்த மனிதரைப் பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம் வெள்ளை நாமம் மட்டும்தான். என் மேல் அன்பு செலுத்திய அனைவரையும் நான் நேசிக்கிறேன். ஒரு நாள் என் வாழ்வில் நடந்த உண்மையை கதையாக ராம் சாரிடம் கூறிக் கொண்டிருந்தேன். அதற்கு பிறகு தான் கற்றது தமிழில் ஆபீஸ் பாயாக இருந்த நான் தங்கமீன்கள் படத்தில் அசோசியேடிவ் இயக்குனர் ஆனேன். மாமன்னன் படம் வெளிய ஆவதற்கு முன்பு பல சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தது அனைவருமே தெரியும். படம் வரும் ஒரு நாளுக்கு முன்னர் கூட உதயநிதி சாரிடம் புலம்பி கொண்டிருந்தேன். அதேபோலத்தான் மாமன்னன் படம் மக்கள் கொண்டாடினார்கள். இப்படி பவா என்னுடைய ஒவ்வொரு படைப்பும் வரும்போதும் என்னை நிறைய பாராட்டுவார் என்று பல விஷயங்களை கூறியிருக்கிறார்.

Advertisement