அன்றாட சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்த பருத்திவீரன் பாட்டிக்கு கார்த்தி உதவி. என்ன தெரியுமா ?

0
1776
lakshmi
- Advertisement -

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அமீர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கினார். அதேபோல இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது குறிப்பாக ஊரோரம் புளியமரம் பாடல் இந்த படத்தில் ஒரு ஹைலைட் பாடலாக அமைந்திருந்தது. இந்த இந்தப் பாடலில் பாடகியாக இடம் பெற்றவர்தான் நாட்டுப்புற பாடகி காரியாபட்டி லட்சுமி அம்மாள். இந்த நிலையில் பாடகி லட்சுமி அம்மாள் வறுமையின் பிடியில் அவதிப்பட்டு வருவதை அறிந்து நடிகர் கார்த்தி உதவிக்கரம் நீட்டி உள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் பிரபல இணையதள பக்கத்தில் லட்சுமி அம்மாள் பாட்டி குறித்து செய்தி ஒன்று வெளியானது. அதில் லட்சுமி அம்மாள் பாட்டி ஒழுகும் வீட்டில் பெற்ற விருதுகளை கூட வைக்க இடமில்லாமல் அன்றாட சாப்பாடுக்கே வழி இல்லாமல் வறுமையில் வாடுவதாக செய்திகள் வெளியானது. இதை அறிந்த நடிகர் கார்த்தி ரசிகர் மன்றம் மூலமாக லட்சுமி அம்மாள் பாட்டிக்கு 10,000 ரூபாய் ரொக்கப் பணத்தை அளித்திருக்கிறார்.

lakshmi

மேலும் அவருடைய மருத்துவச் செலவிற்கு மாதம் தோறும் தொடர்ந்து உதவுவதாகவும் நடிகர் கார்த்தி கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள லட்சுமி அம்மாள் பாட்டி கார்த்தி என்னை பற்றிய செய்தியை அறிந்து உடனே எனக்கு உதவி செய்திருக்கிறார். அவருக்கு மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார். மேலும், இந்த செய்தியை வெளியிட்ட இணைய தளத்திற்கும் நன்றியை தெரிவித்திருக்கிறார் லட்சுமி அம்மாள் பாட்டி.

-விளம்பரம்-
Advertisement