அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க. வைரலாகும் ஹர்பஜன் ட்விட்.

0
13148
harbajan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பிரபலமான வீரர்களில் ஹர்பஜன் சிங்கும் ஒருவர். இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீப காலமாக இவர் கிரிக்கெட் விளையாட்டை தவிர சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சமீபத்தில் தமிழில் ஸ்டேட்டஸ் ஒன்று போட்டு இருந்தார். அது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் அவர்கள் தமிழில் முதன் முறையாக ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தை சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஹர்பஜன் சிங்க் நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப்.

-விளம்பரம்-

இந்த படத்தை ஜான் பவுல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும், இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இவர்களுடன் இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் காமெடி நடிகர் சதீஸ் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து நடிகர் சதீஷ் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, நம் சென்னை ஐபிஎல்- ன் தமிழ் புலவர் ஹர்பஜன் சிங் உடன் இணைவது மிக்க மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த ஹர்பஜன் சிங் அவர்கள் பதில் ட்விட் போட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, புது மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க. தம்பி நல்லா சிரித்த முகம். பார்க்க அப்படியே ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க.

படத்தில் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கட்டும். நல்ல நெருக்கி செய்வோம் என்று பதிவிட்டிருந்தார். இவர் இப்படி பதிவிட்ட கருத்து தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், நடிகர் சந்தானம் அவர்கள் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங்க் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

-விளம்பரம்-
Advertisement