இன்றைய விபத்து மிகக் கொடூரமானது, மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்-கமல் உருக்கம்.

0
1947
indian-2
- Advertisement -

-விளம்பரம்-

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் -2′ படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய படப்பிடிப்பில் நடிகர் கமலும் கலந்துகொண்டார், நேற்று இரவு, படப்பிடிப்பின்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இந்த கிரேன் மானிட்டர் எனும் படப்பிடிப்புக் காட்சிகளைப் பார்க்கும் கூடாரம் மீது விழுந்தது. அந்தப் பகுதியில்தான் இயக்குநர் ஷங்கர், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் இருந்தனர்.

- Advertisement -

இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த 8 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்தின் போது இயக்குனர் ஷங்கருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாகவும் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், அது பொய்யான செய்தி என்று பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையும் பாருங்க : உண்மையில் அவர் யார் ? போட்டுடைத்த பிரியாபவானி சங்கர். வீடியோ இதோ.

-விளம்பரம்-

ராட்சத கிரேனில் அதிக எடைகொண்ட லைட்கள் அமைக்கப்பட்டிருந்தன. உயரத்தைக் குறைக்காமல் கிரேனை இயக்கியது விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது.

மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்.

Advertisement