வடிவேலுவுடன்லாம் ஒப்பிட்டு என்னை மட்டம் தட்டாதே.! செம கடுப்பான லாஸ்லியா.!

0
6206
losliya
- Advertisement -

நேற்றய (ஜூலை 22)நிகழ்ச்சியில் வழக்கம் போல லாஸ்லியா கார்டனில் ஜாலியாக பாடல் பாடி கொண்டிருந்தார். அப்போது உடன் பாடிக்கொண்டிருந்த முகேன் ‘எனக்கு உன்னை பார்த்தால் மிஸ்டர் ரோமியோ படத்தில் வரும் மோனாலிசா பாடல் தான் நினைவிற்கு வருகிறது என்றார்.

-விளம்பரம்-

- Advertisement -

மோனோலிசா என்ற பெயரை கேட்டதும் ‘அப்படியா என்ன பாடல் அது’ என்று ஆர்வத்துடன் கேட்டார் லாஸ்லியா, பின்னர் கொஞ்சம் தூரத்தில் அமர்ந்து கொண்டிருந்த ரேஷ்மா, ஷில்பா ஷெட்டி கேரக்டரா என்று முகேனிடம் கேட்க, அதற்கு முகேனோ’இல்லை வடிவேலு கேரக்டர்னு’ சொன்னதும் லாஸ்லியாவின் முகம் சட்டென்று சுருங்கிவிட்டது.

இதையும் பாருங்க : இது தான் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.! கவின் யார பண்ணி இருக்கார் பாருங்க.! 

இதனால் கடுப்பான லாஸ்லியா, என்னை இப்படி(வடிவேலுவுடன்) எல்லாம் ஒப்பிட்டு மட்டம் தட்டி பேசாதே முகேன், நானும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன் என்னையும், மதுவையும் நீ மட்டம் தட்டித்தான் பேசுகிறாய் இனிமேல் அப்படி பேசாதே எனக்கு பிடிக்கவில்லை என்று மூஞ்சில் அடியதார் போல் கூறிவிட்டார்.

-விளம்பரம்-

இதனால் கொஞ்சம் ஷாக்கான முகேன் உண்மையாக சொல்கிறாயா விளையாட்டிற்கு சொல்கிறாயா என்று பல முறை கேட்டும், உண்மையாக தான் சொல்கிறேன் இனிமேல் அப்படி என்னை மட்டம் தட்டாதே என்று கூறினார் லாஸ்லியா. இறுதியாக லாஸ்லியா கிச்சனில் இருக்கும் போது கூட அவரை சமாதானம் செய்த முகேன் அங்கேயும் உண்மையாக தான் சொன்னாயா இல்லை விளையாட்டிற்கு சொன்னாயா என்று கேட்டார்.

அப்போதும் லாஸ்லியா நான் சீரியஸ்சாக தான் சொன்னேன், நீ விளையாட்டிற்கு சொன்னாலும் நான் பல முறை சொன்னேன் எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னேன். அதுவும் எனக்கு என்னை புடிக்கும் , அதனால் என்னை நீ மற்றவர்களுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டி பேசியது எனக்கு பிடிக்கவில்லை என்றார். இதனால் மன்னிப்பு கேட்ட முகேன், இனிமேல் நான் அப்படி செய்யமாட்டேன் என்றார்.

Advertisement