யோகி பாபு நடித்துள்ள லக்கி மேன் எப்படி இருக்கிறது – முழு விமர்சனம் இதோ.

0
1724
Yogibabu
- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார் யோகி பாபு. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லக்கி மேன். இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரேச்சல் ரபேக்கா, வீர பாபு , அப்துல் அலி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மதன் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் லக்கி மேன் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் யோகிபாபு தன்னுடைய மனைவி ரேச்சல் ரபேகா, எட்டு வயதில் ஒரு மகள் என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இடைத்தரகராக பணியாற்றிய வருகிறார். ஏழ்மை இவரை வாட்டினாலும் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். தினமும் வறுமையோடு போராடும் யோகி பாபு தன்னுடைய இந்த நிலைமைக்கு அதிர்ஷ்டம் இல்லாமை தான் காரணம் என்று நினைக்கிறார்.

- Advertisement -

அதோடு தான் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் வருத்தப்பட்டு யோகி பாபு புலம்புகிறார். இப்படி இருக்கும் நிலையில் தான் திடீரென்று ஒரு நாள் குலுக்கல் சீட்டில் யோகிபாபுவுக்கு கார் ஒன்று பரிசாக கிடைக்கிறது. அந்த காரை தான் அவர் தன்னுடைய வாழ்க்கையில் கிடைத்த முதல் அதிர்ஷ்டம் என்று கொண்டாடுகிறார். அதன்பிறகு அவருடைய தொழிலிலும் முன்னேற்றம் அடைகிறது. பொருளாதார ரீதியாகவும் யோகி பாபு வாழ்க்கை மாறுகிறது.

இப்படி இருக்கும் நிலையில் யோகி பாபுவின் கார் திடீரென்று காணாமல் போகிறது. அதற்கு பிறகு அவருடைய வாழ்க்கையில் என்ன ஆனது? காணாமல் போன கார் மீண்டும் கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் யோகிபாபுடைய நடிப்பும் காமெடியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தன்னுடைய எதார்த்தமான இயல்பான நடிப்பின் மூலம் இந்த படத்தில் யோகி பாபு வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

அதோடு நகைச்சுவை காட்சிகளில் மட்டுமில்லாமல் எமோஷனல் காட்சிகளிலும் யோகி பாபுவின் நடிப்பு பார்வையாளர்கள் மத்தியில் கிளாப்சை வாங்கி இருக்கிறது. இவர் அடுத்து யோகிபாவின் மனைவியாக வரும் ரேச்சல் ரபேக்கா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒளிப்பதிவு இசையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. ஒரு மனிதன் அதிர்ஷ்டத்தை நம்பிக்கொண்டு அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றால் என்ன ஆகும் என்பதை இயக்குனர் படத்தில் காண்பித்து இருக்கிறார்.

ஒரு நல்ல நகைச்சுவை கருத்துள்ள படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர்களிடம் சரியான வேலையும் வாங்கி இருக்கிறார். மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு யோகி பாபுவின் லக்கி மேன் படம் நல்ல படமாக அமைந்திருக்கிறது.

நிறை:

யோகிபாபு நடிப்பு சிறப்பு

பின்னணி இசையும் ஓளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது.

நடிகர்களின் தேர்வு அருமை

இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதம் சிறப்பு

நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல நகைச்சுவை கருத்துள்ள படம்

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான். ஆனால், காமெடி படத்திற்கு ஓகே தான்

சிம்பிளான கதை

எமோஷனல் பெரிதாக யோகி பாபுவிற்கு செட்டாகவில்லை

மொத்தத்தில் லக்கி மேன்- அதிர்ஷ்டம்

Advertisement