“நானும் இஸ்ரோவின் விஞ்ஞானி தான்” பொய்களை கூறி கைது செய்யப்பட்ட குஜராத் சூரத்தை சேர்ந்த நபர்.   

0
1824
- Advertisement -

உலகமே உற்று நோக்கிய சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் அதில் பணி புரிந்த விஞ்ஞானிகளுக்குபல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக தமிழ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரோவிர்க்குள் நுழையாத ஒரு நபர் நானும் இஸ்ரோவில் பணிபுரிந்த விஞ்ஞானி என்றும் என்னால் தான் சந்திராயன் 3 வெற்றிகரமாக ஏவப்பட்டது என்றும் பொய்களை தூவி உடகங்களுக்கு பேட்டியும் ஒன்றை அளித்துள்ளார்.

-விளம்பரம்-

குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் மித்துள் டிவேற்றி. இவர் எம்.காம் பட்டதாரியான இவர் அங்குள்ள பன்னிரெண்டாம் மாணவர்களுக்கு ட்யூசன் எடுத்து வருகிறார்.இந்த நிலையில் சந்திராயன் 3 நாடே கொண்டாடும் நிலையில் இவர் இஸ்ரோவில் இருந்து தனக்கு கடிதம் ஒன்று வந்துளதாக போலியான கடிதத்தை தமக்கு தாமே அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தை தனது மாணவர்களிடம் காண்பித்து பெருமையடைந்துள்ளார். மேலும் இவர் தன்னை பற்றி புகழ்ந்து பல பொய்களை அந்த மாணவர்களிடம் கூறியுள்ளார்.

- Advertisement -

சந்திராயன் 3 வடிவமைப்பிற்கு தன்னுடைய பங்கு முக்கியம் வாய்ந்ததாக இருந்தது என்றும் அடுத்ததாக நடக்கவிருக்கும் பாதரச திட்டத்திற்கு தன்னுடைய பங்களிப்பு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறிய பொய்களுக்கு ஏற்றார் போல் போலியான நியமான கடிதங்ககளை இஸ்ரோ அனுப்பியது போல் போலியாக தயார் செய்து தனக்கு தாமே அனுப்பி வைத்து கொண்டார். மேலும் அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு ட்யூசன் மாணவர்களுக்கு காண்பித்து பெருமையடைந்துள்ளர். தனக்கு பாடம் நடத்தும் ட்யூசன் வாத்தியாரை பற்றி புகழ்ந்து அவர்களுடைய முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதனை கண்ட தனியார் செய்தி நிறுவனம் ஒன்று இஸ்ரோ விஞ்ஞானி இங்கு ஒருவர் இருக்கிறார் என்று அவரை பேட்டி எடுக்க அவரிடம் அனுமதி ஒன்றை கேட்டுள்ளனர். அதற்க்கு அவரும் சம்மதித்து இருக்கிறார். அந்த பேட்டியில் சிறுதும் பயமின்றி உண்மயான விஞ்ஞானி போல் பேட்டியும் அளித்துள்ளார். அப்போது பேட்டி எடுத்த ஒருவர் நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 தரை இறங்கிய போது உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது என்று கேட்டுள்ளார்.

-விளம்பரம்-

அப்போது எந்தவித பதட்டமும் இன்றி அந்த நொடியில் இஸ்ரோவில் இருந்த நாங்கள் நிலவில் இருந்தது போல உணர்ந்தோம் என்று அவர் கூறினார். இது என் வாழ்நாளில் மிகவும் பெருமையான தருணம் என்று கூறினார். இந்த வீடியோ வைரல் ஆக இவர் விஞ்ஞானி இல்லை என்றும் பொய்களை கூறி வருகிறார் என்றும் பலர் கட்டமாக தெரிவித்து வந்தனர். இதனை கண்ட சூரத் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அவர் கூறுகையில் நான் உண்மையான விஞ்ஞானி இல்லை என்றும் எனது ட்யூசன்க்கு மாணவர்கள் அதிக அளவில் வரவேண்டும் என்று இப்படி ஒரு பொய்யை கூறினேன் என்றார். அதன் பின் அவரை ipc 465, ipc 468, ipc 471 மற்றும் ipc 419 ஆகிய பிரிவுகளில் காவல் துறை அவரை கைது செய்துள்ளது.                      

Advertisement