எப்படி இருக்கிறது தனுஷின் மாறன் – முழு விமர்சனம் இதோ.

0
885
maaran
- Advertisement -

ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள படம் ‘மாறன்’. இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மார்ச் 11 ம் தேதி நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஜகமே தந்திரம், அத்தரங்கி ரே/ கலாட்டா கல்யாணம் படத்தை தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்.

-விளம்பரம்-

கதைக்களம் :

தனுஷின் தந்தையாக வரும் ராம்கி நேர்மையான பத்திரிகையாளராக இருந்து வருகிறார் பள்ளியில் நடக்கும் ஊழல் பற்றி உண்மையை கண்டுபிடித்து எழுதியதால் பின்னர் அவர் ரவுடிகளால் கொல்லப்படுகிறார் அதே சமயத்தில் அவரது மனைவியும் பிரசவத்தின்போது உயிரிழக்கிறார் தாய் தந்தையை இழந்த தனுஷ் தன்னுடைய தங்கையை வளர்த்து ஆளாக்கினார் மேலும் தன்னுடைய தந்தையைப் போலவே அவரும் ஒரு நேர்மையான பத்திரிக்கையாளராக உருவெடுக்கிறார்.

- Advertisement -

படத்தின் ஆரம்பத்திலேயே பாரில் ரவுடிகளுடன் போதையில் சண்டை போட்டு போலீசிடம் சிக்கி பின்னர் மாளவிகா வந்து மீட்டுச் செல்கிறார். அப்படியே பிளாஷ்பேக் துவங்குகிறது அப்பாவைப்போல எதை எழுதினாலும் அதை ஆராய்ந்து அதில் இருக்கும் உண்மையை தான் எழுதுகிறார் தனுஷ். பின்னர் தனுஷின் நண்பரான போலீஸ் அதிகாரி ஒருவர் அரசியல்வாதியான சமுத்திரக்கனி வாக்கு எந்திரத்தில் வாக்கு வாக்குப்பதிவில் செய்த முறைகேட்டை கண்டு பிடிக்கச் சென்ற போலீஸ் அதிகாரி காணவில்லை என்பதால் தனுஷின் உதவியாய் நாடுகிறார்.

மேலும் இந்த வழக்கில் உண்மை என்ன என்பதை கண்டுபடிக்க தனக்கு உதவி செய்யுமாறு கேட்கிறார். இதனால் தனுஷ் ஒப்புக்கொள்கிறார். பின்னர் சமுத்திரகனி அதிகாரத்திற்கு வர வாக்கு இயந்திரத்தில் செய்யும் ஊழல்களை கண்டுபிடிக்கிறார் தனுஷ். இதனால் தனுஷ் வாழ்விலும் அவரது தந்தை ராம்கி போல பிரச்சினை ஏற்படுகிறது. இறுதியில் தனுஷ் அந்த பிரச்சினைகளிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

நிறைகள் :

தனுஷ் இந்த படத்தில் மிகவும் உற்சாகத்துடனும் இளமையுடனும் தனது நடிப்பிலும் தோற்றத்திலும் நடனத்திலும் அசத்தி இருக்கிறார்.

படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் சூப்பர், மேலும் அண்ணன் தங்கை பாசம் அளவாக இருக்கிறது என்பது பிளஸ்

படத்தில் இருக்கும் ட்விஸ்ட்டுகளை கடைசி வரை கொண்டு சென்றது இயக்குனரின் சாமர்த்தியம்.

குறைவான பாடல்கள், குறைவான படத்தின் நீளம் ஆகியவை படத்திற்கு பலம்.

குறைகள் :

மாஸ்டர் படத்தை போல இந்த படத்திலும் மாளவிகாவிற்கு பெரிதாக வேலையும் இல்லை, அவருக்கு நடிப்பும் வரவில்லை.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை.

படத்தில் தனுஷ் தங்கைக்கு எதனால் பார்வை தெரியாதபடி வைத்து அதில் ஒரு சென்டிமென்டை வைத்தார்கள் என்பது புரியவில்லை.

படத்தில் வில்லன் சமுத்திரகனி என்றாலும் படத்தில் சமுத்திரகனியை பெரியதாக பயன்படுத்தவில்லை.

படத்தில் தேவை இல்லாத பல கதாபாத்திரங்கள், மற்றும் தேவையில்லாத காட்சிகள் படத்தின் சுவாரசியத்தை குறைக்கிறது.

இறுதி அலசல் :

ஜகமே தந்திரம் படத்தின் படு தோல்வியை தொடர்ந்து வெளியாகியிருக்கும் மாறன் திரைப்படம் தனுஷிற்கு கைகொடுத்திருக்கிறது என்று சொல்லலாம் இந்த படத்தை பார்க்கும் போது கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ ரஜினியின் தர்பார் போன்ற படத்தின் சாயல் தோன்றினாலும் படத்தின் கதை மற்றும் திரைக்கதை ஓரளவிற்கு நன்றாகவே இருக்கிறது மேலும் ஏற்கனவே சொன்னது போல படத்தில் பாடல்கள் குறைவு மேலும் படத்தின் நீளம் குறைவு என்பதால் ஒரு சரியான ஆக்ஷன் சஸ்பென்ஸ் படமாக இந்த படம் அமைந்து உள்ளது. மாறன் – மோசமான பட லிஸ்ட்டில் இருந்தது தப்பித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement